பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

சிலப்பதிகாரம்

நீடுவா ழியரோ நெடுந்தகை!' என்ற மாடல மறையோன் தன்னொடு மகிழந்து -

வழிபாடு செய்தல் பாடல்சால் சிறப்பிற் பாண்டி நன்னாட்டுக் கலிகெழு கூடல் கதழெரி மண்ட முலைமுகம் திருகிய மூவா மேனிப் பத்தினிக் கோட்டம் படிப்புறம் வகுத்து, நித்தல் விழாவணி நிகழ்க எண்று ஏவிப், 'பூவும், புகையும், மேவிய விரையும், தேவந் திகையைச் செய்க' என்று அருளி, வலமுறை மும்முறை வந்தனன், வணங்கி, உலக மண்னவண் நின்றோண் முன்னர், அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் 'எந்நாட்டு ஆங்கண் இமைய வரம்பனின் நன்னாள் செய்த நாள்அணி வேள்வியில் வந்துஈக' என்றே வணங்கினர் வேண்டத்.

'தந்தேன் வரம்' என்று எழுந்தது ஒரு குரல்; ஆங்கு அது கேட்ட அரசனும் அரசரும், ஓங்கிரும் தானையும் உரையோடு ஏத்த; வீடுகண் டவர்போல், மெய்ந்நெறி விரும்பிய மாடல மறையோன் தண்னொடும் கூடித் தாழ்கழல் மண்னர் தன்னடி போற்ற, வேள்விச் சாலையின் வேந்தண் போந்தபின்

இளங்கோ அறவுரை யானும் சென்றேன்; எண்னெதிர் எழுந்து, தேவந் திகைமேல் திகழந்து தோன்றி.

150

155

160

165

170