பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகி 203 கவுந்தி அடிகள் 'கற்புடைத் தெய்வம்' என்ற தொடரில் மாதரிக்கு அறிமுகம் செய்கிறாள்.

'கற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்' என்று கூறக் காண்கிறோம். இவள் தெய்வம் ஆவதற்கு வேண்டிய தகுதிகள் உள்ளன என்று கோடிட்டுக் காட்டுகிறார்.

இடையர் சேரியில் மாதரி இவளைத் தெய்வக் காட்சியில்

வைத்துக் காண்கிறாள்,

'தொழுனை ஆற்றினுள் தூமணிவண்ணனை விழுமம் தீர்த்த விளக்குக் கொல்' என்று கூறி இவளை நப்பின்னையோடு உவமிக்கிறாள். இதுவும் தெய்வக் காட்சி என்று கொள்ளலாம்.

குன்றக் குறவர்கள் வேலனை வழிபட்டவர்கள்: இவளைத் தெய்வமாகக் கொள்கின்றனர்.

'இவள் போலும் நங் குலக்கு ஒர் இருந் தெய்வம் இல்லை'

என்று கூறி வழிபடுகின்றனர்.

மதுரையில் கண்ணகி ஆற்றாது அழுகின்றாள்.

வவளைக் கண் அவளைக் கண்டு மதுரை மக்கள் இவளைப் புதிய தெய்வம் என்று கூறக் காண்கிறோம்.

'செம்பொற் சிலம்பு ஒன்று

கையேந்தி நம் பொருட்டால்

வம்பப் பெருந்தெய்வம் வந்தது இதுவென் கொல்' என்று அவள் தெய்வத் தன்மையைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

சேரன் செங்குட்டுவன் மனைவி அவள் தான் இவளை நன்கு அறிந்தவளாகக் காட்டிக் கொள்கிறாள்.

'அத்திறம் நிற்க நம் அகல் நாடு அடைந்த இப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்' என்று கூறியவள் சேரமா தேவிதான்; மாதரார் தொழுது ஏத்தும் நிலையை இங்குக் காண முடிகிறது.