பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கேற்று காதை

19

வந்தது வளர்த்து, வருவது ஒற்றி, இண்புற இயக்கி, இசைபட வைத்து, வார நிலத்தைக் கேடிண்று வளர்த்து, ஆங்கு ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக, வழுவின்று இசைக்கும் குழலோண் தானும் யாழ் இசைப் புலவன் ஈர் ஏழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின் ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி, வண்மையிற் கிடந்த தார பாகமும், மெண்மையிற் கிடந்த குரலின் பாகமும், மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக் கைக்கிளை ஒழிந்த பாகமும், பொற்புடைத் தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக் கிளைவழிப் பட்டனண் ஆங்கே, கிளையும் தண்கிளை அழிவுகண்டு அவள்வயிற் சேர, ஏனை மகளிரும் கிளைவழிச் சேர, மேலது உழைஇளி, கீழது கைக்கிளை, வம்புஉறு மரபின் செம்பாலை ஆயது. இறுதி ஆதி ஆக, ஆங்கு அவை பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது. படுமலை, செவ்வழி, பகள் அரும்பாலை எனக் குரல்குர லாகத் தற்கிழமை திரிந்தபின், முன்னதண் வகைய முறைமையின் திரிந்து ஆங்கு, இளிமுத லாகிய ஏர்படு கிழமையும் கோடி, விளரி, மேற்செம் பாலைஎன நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின் இணைநரம்பு உடையன அனைவுறக் கொண்டு ஆங்கு, யாழ்மேற் பாலை இடமுறை மெலியக் குழண்மேற் கோடி வலமுறை வலிய, வலிவும், மெலிவும், சமனும், எல்லாம் பொலியக் கோத்த புலமை யோனுடன்

65

70

75

80

85