பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 சிலப்பதிகாரம்

கண்ணகிக்கும் கோவலனுக்கும் தொடர்பு பன் னிரண்டாம் வயது; மாதவிக்கும் கோவலனுக்கும் தொடர்பு அதே வயது.

கண்ணகியின் இளமைப் பருவம் பண்டைக் கதைகளைக் கேட்கும் வாய்ப்புப் பெறுகிறாள். கற்புடை மகளிர் கதைகள் அவளுக்குச் சொல்லித் தரப்படுகின்றன. அவளுக்குக் குடும்பப் பெண் என்ற முத்திரை குத்தப்படுகிறது. பெருங்குடி வணிகன் மகள் என்று அடையாளம் காட்டப் படுகிறாள். அவள் படித்த படிப்பு எல்லாம் அறத்துப்பாலின் முற்பகுதி, இல்வைாழ்க்கை வாழ்க்கைத் துணை நலம் இவற்றைப் பற்றி நன்கு கற்றிருக்கிறாள்.

மாதவி பரத சாத்திரம், நாட்டியக் கலைகள், பாடல் கலை இவற்றில் பயிற்சி பெறுகிறாள். ஏழாண்டுகள் இக்கலைகளைக் கற்கிறாள். இவள் உலகமே தனி, கற்பனை உலகில் வாழ் கிறவள். கதைகளுக்கு அபிநயம் பிடிக்கக் கற்றுக் கொண் டவள். இவள் உலகுக்கு இவற்றை எடுத்துச் சொல்ல ஒரு கருவியாகிறாள்.

இவள் கணிகை மகள்; பிறரை மகிழ்வித்தே வாழ வேண்டும் என்ற நியதி அமைகிறது. ஒருசிலர் உடல் உறவால் மகிழ்விப் பவரும் உளர், அவர்கள் நிலை வேறு; இவள் உயர்நிலையில் வாழ்ந்தவள்.

கலை அவள் கற்றுக் கொண்டது; அதைக் கொண்டு உலகை மகிழ்விக்கும் தொழிலை அவள் ஏற்கிறாள். பண்ணொலிகள் அவளைப் பண்படுத்தி வந்தன. அவள் பேச்சில் அசைவில் இனிமை தவழ்கிறது. அவள் அழகின் தேவதை என்று ஆராதிக்கப் படுகிறாள்.

கண்ணகிக்குச் செல்வம் பெரியோர்கள் ஈட்டி வைத்துள்ளனர். இவளுக்கு அதை ஈட்டும் பொறுப்பும் சார்கிறது. 'கலை கலைக் காகவே' என்பது அவள் நோக்க மன்று. கலை வாழ்க்கைக்காக என்பது அவள் நோக்கம்; அதனால் பரிசில் பெறுவது, செல்வம் குவிப்பது அவளுக்குத் தேவையாகின்றன.