பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதவி 211

இளமையில் அழகும் கவர்ச்சியும் இருக்கும்போதே பொருள் ஈட்டிக் குவித்துக் கொள்ள வேண்டும். அது அவள் வாழ்க்கை நிலை.

உழைத்து வாழ்பவர் உழவர்கள் தொழிலாளர்கள்; வணிகர்கள் இதுபோன்றே நேரடி உழைப்பில் ஈடுபடு பவர்கள். தலைமை ஏற்பதால் சிறப்புப் பெறுபவர் அரசர்கள். 'அழகுப் பசி அதற்கு மறுபெயர் 'கலை' அதனை நிறை வேற்றித் தருபவர்கள் கலைஞர்கள்.

கதைகள் மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும் நல்ல கருத்து களை நாட்டுக்குப் பரப்புபவர்கள் இவர்கள். இவர்களை உலகம் மதிக்கிறது; பாராட்டுகிறது; பரிசும் தருகிறது. ஆனால் அன்பு காட்டி அவர்களை நேசிப்பது இல்லை; அதுதான் அவர்கள் அடையும் தோல்வியும்கூட.

கோவலனை இவள் தேடிக் கொள்ளவில்லை. குலுக்கல் முறையில் கிடைத்த பரிசு; அவன் விலை கொடுத்து வாங்குகிறான். அவள் அவனுக்கு அடிமை ஆகிறாள். அவளோடு வாழ்வதற்கு உரிமைப் பதிவு பெறுகிறான். அவனை மகிழ்விப்பது அவள் தொழில் ஆகிவிடுகிறது. அதுவே வாழ்க்கையாகவும் மாறி விடுகிறது.

மற்றைய பெண்களைப் போல இவள் கண்ணியமாக வாழ முயல்கிறாள்; தன்னை அணுகுபவனின் அன்பைப் பெற முயல் கிறாள். அதனை அவளால் பெற முடியவில்லை. அதுதான் அவளைப் பற்றிய முடிந்த நிலை.

மற்றைய பெண்களைப் போல மகள் ஒருத்தியைப் பெறுகிறாள் எனினும் அது அங்கீகரிக்கப் படவில்லை. கோவலன் பெற்றோர்கள் வந்து அன்பு காட்டவே இல்லை. பிரிந்து வருந்தியிருந்த நிலையிலும் அவர்கள் வந்து ஆதரவு காட்டவில்லை. அன்பு என்பதைப் பெற முடியாமல் போய்விடுகிறது. வாழ்க்கையில் ஒதுங்க வேண்டி நேர்கிறது.

அதற்குத்தான் துறவு என்று பெயர் வழங்கப்பட்டது.

தன் மகளுக்கும் அவளால் ஒரு வாழ்க்கை அமைத்துத் தர முடியவில்லை. கலைகளைக் கற்பித்தாள் அவற்றை