பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதவி 213

காதல் இன்பத்துக்குத் துணை செய்வது ஒருவரை ஒருவர் விரும்புவது மட்டுமன்று; ஒருவரை ஒருவர் மதிப்பது. புகழ்ச்சியில் மயங்கிக் கிடந்த கோவலன் அவனால் இகழ்ச்சி

யைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

அச்சத்தின் காரணமாக அவள் சில கருத்துகளை வெளி யிட்டு விடுகிறாள். அவன் உறவு நீடிக்குமா என்ற அச்சம் அவளுக்குத் தோன்றி இருக்க வேண்டும். பொதுவான நிலையில் வைத்து ஆடவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர் என்ற கருத்தைத் தெரிவித்து விடுகிறாள். இவள் பாடிய கானல் வரிப் பாடல்கள் அக்கருத்தை அறிவிக்கின்றன. மனம் முறிகிறது; உறவு அறுகிறது.

அந்த அச்சம் நியாயமானதுதான். அவன் அவளை அமைதிப்படுத்துவதற்கு மாறாக அவசரப்பட்டு விடுகிறான். அவள் தன்னை நேசிக்கவில்லை என்று தவறாகக் கருதி விடுகிறான். அவளை விட்டுப் பிரிகிறான்.

உரிமைகள் அதற்காக எழுப்பப்படும் வினாக்கள் உறவு களை முறித்து விடுகின்றன. கவர்ச்சியால் அவன் ஒன்று பட்டவன்; அவள் அன்பை அவனால் உணர முடியாமல் போகிறது.

பிரிந்து சென்று விடுகிறான்; அவன்பால் உள்ள நேசத்தால் அவள் முடங்கல் எழுதி அனுப்புகிறாள்; அவன் தனக்குத் தேவை என்பதைத் துணிந்து தெரிவிக்கிறாள். அவனை மகிழ்விக்க அல்ல; தான் மகிழ்வு கொள்ள அவனை அழைக்கிறாள். இது அவன் இயல்புக்கு மாறுபட்ட நிலை. அவள் உணர்வை அவன் மதிக்கவில்லை.

அந்த அன்பை அவனால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. பிறகு அவள் தனிமைத் துயரில் வாடியதும், அதனால் வாழ்க்கையை வெறுத்து ஒதுங்கியதும் அறிந்த பிறகு தான் அவள் அன்பின் ஆழத்தை அறிகிறான். அவள் பாசத்தையும் நேசத்தையும் அறிகிறான். அவளுடைய மறு பக்கம் அவனுக்கு விளங்குகிறது. அவள் புறத் தோற்றத்தில் மயங்கியவன் இப்பொழுதுதான் அவள் மனஇயல்பை அறிகிறான். அவள் தீதிலள்; தான் தீது உடையவன் என்று அறிவிக்கிறான்.