பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 சிலப்பதிகாரம்

அவளுக்குத் தான் இழைத்த சிறுமைகளை உணர்கிறான். இதுவரை அவன் கண்ணகிக்குத்தான் தீங்கு இழைத்ததாகக் கருதி வந்தான். கோசிகன் கொண்டு வந்த கடிதம் படித்ததும் மாதவியின் அக அழகை அவனால் அறிய முடிகிறது. அவளையும் தான் வருத்தத்தில் ஆழ்த்திவிட்டதை அறிகிறான்.

அந்த முடங்கலில் அவன் பிரிவால் தான் அடைந்த தனிமையைப் பற்றியோ, துயரத்தைப் பற்றியோ கூறாமல் தன்னால் கண்ணகிக்கு நேர்ந்த கடுமையைப் பற்றியும், அவன் பெற்றோர்களுக்கு உற்ற துன்பத்தைப் பற்றியுமே எழுதி இருக்கிறாள். அவள் பெருமை அதனால் அவனுக்கு விளங்கு கிறது. அவளும் தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி என்பதை அறிகிறான்.

பெண்கள் சூழ்நிலையில் அவர்கள் வேறுபட்டவர் களாகக் காணப்படலாம். நெஞ்சு அலைகளில் பண்பில் வேறுபாடு அற்றவர்கள்; மதிக்கத் தக்கவர்கள். அன்பின் உறைவிடம் என்பதை அவன் அறிகிறான்.

கண்ணகிக்கு நிகராக இவளும் மதிக்கத்தக்கவள் ஆகிறாள். சூழ்நிலைகள் அவர்கள் செயல்களில் மாற்றம் விளைவித்தன என்பதை அறிய முடிகிறது.

காதலித்து ஒருவனைக் கைப்பிடித்து அவனோடு கருத்து ஒத்து அவன் அன்பினைப் பெற்று மனநிறைவு பெற விரும்பி னாள். அவள் அவனைக் காதலித்தாள். அவன் அவளைக் காதலிக்கவில்லை. அது அவன் செய்த தவறு என்று யாரும் சுட்டிக் காட்ட முன்வரவில்லை. உண்மையில் அவன்தான் தவறு உடையவன் என்பது மறுக்க முடியாத ஒன்று.

ஒருவனோடு ஒருத்தியாக வாழ முயன்றாள்; அந்த உரிமைக்கு உறவாடினாள். அவள் தூக்கி எறியப்பட்டிாள்.

அம்மியே கடுங்காற்றில் பறக்கும்போது குழவியைப் பற்றி யார் கவலைப்பட இருக்கிறார்கள்? சமய போதனைகள் அவளுக்குக் கைகொடுக்கின்றன. அருளறத்தில் அவள் அமைதி காண்கிறாள். தன் மகளைப் புதிய பாதையில் திருப்பிவிடுகிறாள். நோய்க்கு அவள் கண்ட மருந்து அது.