பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 சிலப்பதிகாரம்

‘விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்' என்று கூறப்படுகிறதே அன்றி விடுதல் அறியாக் காதலன் ஆயினன் என்று கூறவே இல்லை. அவளிடம் அவன் கண்ட கவர்ச்சி மூன்றாவதாக குறிப்பிட்ட அழகு அதுதான் அவனைக் கவர் கிறது. கோலங் கொண்ட மாதவி' என்றுதான் அவள் குறிப் பிடப்படுகிறாள். அவன் முன் அவள் அழகாக விளங்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறான் என்பது தெரிகிறது.

ஊடற் கொள்கையில் இருந்த அவனை மகிழ்விக்க அவள் நகைகள் பல பூண்டு தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள். கவர்ச்சியில் அவனை வைத்திருக்கிறாள் என்பது தெரிகிறது.

கண்ணகியை அவன் பாராட்டி இருக்கிறான்; அழகுக்காக முதலில் அவள் குணத்துக்காகப் பின்பு மாதவியை எந்த இடத்திலும் அவன் பரராட்டியதாகத் தெரியவில்லை. அவள் இடத்தில் அறிவைக் காண்கிறான்; அன்பை அவனால் கான முடியவில்லை. அந்த அறிவே பிணக்கும் காரணமாகிறது. அவள் பாடல் கருத்துகளில் குறை காண்கிறான், அது ஊட லுக்குக் காரணம் ஆகிறது.

கோவலன் கதையே கண்ணகி மாதவி உறவு இவற்றில் அடங்கி விடுகிறது. என்றாலும் அவன் புற உலகில் நன்கு மதிக்கப்பட்டவன் என்று தெரிகிறது.

கவுந்தி அடிகள் அவன் தோற்றத்தைக் கண்டு அவன் அறிவும் உருவும் குலனும் உயிர்பேர் ஒழுக்கமும் கடவுள் வழிபாட்டுச் சிந்தனையும் உடையவன் என்பதை அவரால் காண முடிகிறது.

'உருவும் குலனும் உயர்பேர் ஒழுக்கமும்

பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்

உடையீர்!

என்று விளிக்கின்றார்.

இடைச்சியரிடம் கண்ணகி அவன் தெய்வ வழிபாட்டுச்

சிந்தனை உடையவன் என்று எடுத்துக் கூறுகிறாள். 'சாவக நோன்பி' என்று அவனைப் பற்றிக் கூறுகிறாள்.