பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவலன் 219

கவுந்தி அடிகள் வறு மொழியாளனையும், பரத்தை யையும் சபித்த போது குறுக்கிட்டு அவர்களைப் பொறுக்கும் படி வேண்டுகிறான்.

'நெறியில் நீங்கியோர் நீரல கூறினும்

அறியாமை என்று அறியல் வேண்டும்'

y

என்று அறிவிக்கிறான். அறிவுரை கூறும் அளவுக்கு அவன் கல்வி கற்றவன் என்பதைக் காட்டுகிறது.

பெண்ணோடு பழகியவன்; ஆனால் பெண்மையை நன்கு அறியாதவன் என்றே அவனைப் பற்றிக் கூறவேண்டி உள்ளது. மாதவியின் ஒருபக்கம் மட்டும் அவனுக்குத் தெரிந்தது. அவள் ஆழ்ந்த அன்பை அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை. அவள் கவர்ச்சியில் ஆழ்ந்தவன் அவள் காதலை அறியவில்லை. அவளை மாயத்தாள் என்று தவறாக முடிவு செய்கிறான். பின்பு அவள் அவனை மறக்க முடியாமல் அவன் நினைவிலேயே வாழ்வதை அறிகின்றான். அவள் விட்ட கண்ணிர் பின்புதான் அவனைச் சுடுகிறது. அவள் தீது இலள் தான்தான் தவறு செய்தது என்று முடிவுக்கு வருகிறான்.

கண்ணகியின் அழகில் மயங்கியவன் அவள் அறக் கோட்பாடுகளை அவனால் மூதலில் அறிய முடியவில்லை. அவள் பெருங்குடி வணிக மகள் என்பதில் பெருமை கொள்கிறான். அவள் அருங்குணங்களைப் பேசவே இல்லை. வடுநீங்கு சிறப்பின் மனையகம் மறக்கிறான்.

அவள் உருவத்தையும் அழகையும் அவள் தரும் இன்பத்தையும் பற்றித்தான் பேசினான். அவள் அருங் குணங்களைப் பின்னர் அறிகின்றான். 'கற்பின் கொழுந்து; நீள்நிற விளக்கு' என்று எல்லாம் பின்னால்தான் பேசுகிறான். அவன் பெண்மையை அறியாதவன்; அவன் வாழ்வில் பின் கண்டது பெண்ணின் பெருமை; அதனை மாதவியிடம் கண்டு தெளிகிறான். கண்ணகியை முழுவதும் அறிகிறான். வாழ்க்கைப் பள்ளியில் அவன் தெரிந்து கொண்ட கல்வி அது பெண்மையை அறிவிக்க அவன் கருவியாகிறான்.