பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 சிலப்பதிகாரம்

குன்றுபோல் இருந்த நிதியைத் தொலைக்கிறான்; அதற்குக் காரணம் அரிய பொருள் மொழிகளை மறந்தான் எனலாம் 'இலம்பாடு நாணுத் தரும்' என்ற உணர்வை வெளிப்படுத்துகிறான். மறுபடியும் அவன் பெற்றோரிடம் பொருள் பெற்று நன்றாக வாழ்ந்து இருக்க முடியும். அவன் மான உணர்வு அவனைத் தடுக்கிறது.

தானே பொருளிட்ட வேண்டும். இழந்ததை மீண்டும் பெற வேண்டும் என்று நினைத்துச் செயல்படுகிறான். புற வாழ்வில் அவன் சிந்தனை போற்றத் தக்கதாக விளங்கு கின்றது.

(4. துணைப் பாத்திரங்கள்) .

காவியத் தலைமை மாந்தர்கள் கதையை இயக்குபவர்கள்

ஆகின்றனர். இவர்கள் தொடர்பு கொள்ளும் மாந்தர்கள் துணை மாந்தர்கள் என்று கூறப்படுபவர். கோவலனுக்குப் பாங்கன் என்று யாரையுமே குறிப்பிட முடியவில்லை. வறுமொழி யாளர் வம்பப் பரத்தரொடு தோழமை கொண்டிருந்தான் என்று தெரிகிறது.

காதல் செய்து இவன் திருமணம் செய்து கொள்ள வில்லை. பெற்றோர்கள் முன்னிருந்து திருமணம் செய்விக் கின்றனர். அந்த வகையில் அவர்கள் துணைப் பாத்திரங்கள் ஆகின்றனர். கண்ணகியின் தந்தை மாநாய்கன்; அவன் மழையைப் போல் கொடுக்கும் இயல்புடைய வள்ளல் என்று கூறப் படுகிறான் அவனுக்குக் கண்ணகி ஒரே மகள்; அவள் குலக் கொடியாக விளங்குகிறாள். கோவலன் கண்ணகி மறைவுக்குப்பின் தானம் பல செய்து அறவாழ்வு மேற்கொள்கிறான்.

கோவலன் தந்தை செல்வம் மிக்கவன்; அரசன் மதிக்கும் பெருவாழ்வு பெற்றிருக்கிறான். பொருள் பிறருக்குத் தந்து புகழ் படைத்தவனாக விளங்குகிறான்; மாதவியோடு கோவலன் தொடர்பு கொண்டிருந்த நாட்களில் கண்ணகிக்கு அன்பு காட்டி அவள் | துயரத்தில் பங்கு கொள்கிறான்; கண்ணகியின் வாயல் முறுவலுக்கு உள்ளகம் வருந்துகிறான்.