பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 சிலப்பதிகாரம்

அன்பு வாழ்க்கைக்கு இவள் அகம் குளிர்கிறாள். அவர்கள் சாவுச் செய்தி இவளை அதிர வைக்கிறது. உயிர்விட்டு விடுகிறாள்.

ஐயை கண்ணகிக்கு நாத்துண் நங்கைபோல உறவு காட்டி உடன் இருந்து உதவுகிறாள். மணமே செய்து கொள்ளாமல் வாழ்க்கையை வெறுத்துத் தனிமரமாகி நின்றுவிடுகிறாள். முதிர் கன்னியாக முற்றுப் பெறுகிறாள்.

இந்தத் துணை மாந்தர்கள் இவர்களோடு நெருக்கம் கொண்டு உதவுகிறார்கள். அவலத்தால் பாதிக்கப்படுகிறார்கள். நல்லவர்கள் அறிவாளிகள், துறவிகள், அந்தணர்கள் என்று பலதிறத்தவராய் விளங்குகிறார்கள்.

இந்தக் காவியத்தில் இடம் பெறும் பாண்டியன், சேரன் செங்குட்டுவன் முதலானோர் வரலாற்று மாந்தர்கள். அவர்கள் கவிஞனின் படைப்புகள் அல்லர். எனவே அவர்களைத் துணை மாந்தர்கள் என்று கூற இயலாது. -

இந்தக் காவியத்தில் தீயவரே இடம் பெறவில்லை. பொற் கொல்லன் ஒருவன்தான் தீயவன் ஆகிறான்; அடுத்தது ஊழ்வினை கதைத் திருப்பங்களுக்குத் துணை செய்கிறது. காவியத்தில் ஊழ்வினை தலைமை இடம் பெறுகிறது.

(5. ക്രങ്ങിജ്ഞങ്ങ്)

'உணர்வின் வல்லோர்

அணிபெறச் செய்வன செய்யுள்'

என்பர் நன்னூலார்.

சொல்லுகின்ற செய்திகளை நயம்படக் கூறுதல் புலமை

என்று கூறப்படும். அந்த நயம் அணிகளாலேயே பெறப்

படுகின்றது.

உவமை அணிகளுள் தலைமையானது; அதைக்

கற்பனை நயம்பட அமைக்கும் போது அவை கருத்தைக் கவர்கின்றது. |கவிஞனின் புலமையை வியக்கச் செய்கிறது.