பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 சிலப்பதிகாரம்

என்று கண்ணகிக்கு இவற்றை உவமைப்படுத்தி இருப்பது நயம் மிக்கதாக உள்ளது.

ஆசிரியர் செய்திகளை முரண்தொடை நயம் தோன்றக் கூறுவதைப் பல இடங்களில் காண்கின்றோம்.

மாதவியை அடைந்து அவளை விட்டுப் பிரியாமல் கோவலன் அங்கேயே தங்கிவிடுகிறான்

'விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்

வடுநீங்கு சிறப்பின் மனைஅகம் மறந்து'

என்று கூறுவார் இரண்டு முரண்பட்ட செய்திகளை ஒரே இடத்தில் வைத்து நயம் தோற்றுவித்தலைக் காண்கிறோம்.

- அந்திமாலைச் சிறப்புச் செய் காதையில் பிரிந்த நிலையில் மகளிர் துயரத்தையும், கூடிய நிலையில் அவர்கள் மகிழ்வு நிலையையும் அடுத்து அடுத்து வைக்கக் காண்கிறோம்.

சிறப்பாக மாதவி கண்ணகி இவர்களை மாறுபட்ட

நிலைகளில் சித்திரித்துக் கூறுகிறார்.

'நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக் கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக் கோலம் கொண்ட மாதவி' -

இது மாதவியின் மகிழ்வு நிலை.

{ {

அம்செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய மென்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் கொடுங்குழை துறந்து வடிந்து வீழ் காதினள் திங்கள் வாள்முகம் சிறுவியர் பிரியச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப பவள வாள் நுதல் திலகம் இழப்ப மை இருங் கூந்தல் நெய்யணி மறப்பப் கையறு நெஞ்சத்துக் கண்ணகி'

என்று கூறுகிறார். இது கண்ணகியின் தனிமை நிலை.