பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 சிலப்பதிகாரம்

மீண்டும் பிறந்த நாட்டுக்குச் செல்வதா? எப்படிப் போக முடியும்? கணவன் இன்றித் தனித்து எப்படிப் போக முடியும்? போய் என்ன செய்வது?.

"கீழ்த்திசைவாயில் கணவனோடு புகுந்தேன்

மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு'

என்று கூறிக் கொண்டு சேர நாடு நோக்கிச் செல்கிறாள்.

இரு வேறு காட்சிகள் அவள் கண் முன் வந்து நிற்கின்றன. இம் முரண்தொடை அவள் அடைந்த அவலத்தின் எல்லையைக் காட்டுகின்றது. முரண் தொடை இங்குத் தலைமை பெற்று விளங்குகிறது.

துன்பத்தையும் இன்பத்தையும் இணைத்து வைத்துக் காட்டும்போதே காவியத்தில் அவலம் மிகுதிப்படுகிறது. ஒப்பிட்டுப் பார்க்கும்போது தவறுகள் தலைதெறிக்கக் காணப் படுகின்றன.

இல்பொருள் உவமையணி

திங்களையும் ஞாயிற்றையும் உடன் வைத்துப்

போற்றிய கவிஞர் அவை ஒருங்கு உடனிருப்பதாகக் கூறி

அக்காட்சியை உவமையாக்கி உள்ளார்.

கோவலனும் கண்ணகியும் நெடுநிலை மாடத்தில் நிலவு வீசும் ஒளியில் களித்து மகிழ்வு கொள்கின்றனர். இருவரும் உடன் இருக்கும் காட்சியை ஞாயிறும் திங்களும் ஒருங்கு இருக்கும் காட்சிக்கு உவமைப்படுத்தி உள்ளார். கதிர் ஒருங்கு இருந்த காட்சிபோலக் கண்ணகியும் கோவலனும் உடன் இருந்தனர் என்று கூறக் காண்கிறோம்.

திங்களும் ஞாயிறும் உடன் இருத்தல் என்பது இல்லாத செய்தி, அதனை உவமமாகக் கூறியிருப்பது இல்பொருள் உவமை அணி ஆகும்.

சிலேடை அணி

அந்திமாலைச் சிறப்புச் செய் காதையில் மாலைக் காட்சியை வருணிக்கிறார் கவிஞர்.