பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 சிலப்பதிகாரம்

தான் கருதும் குறிப்பைத் தான் வருணிக்கும் செய்திகளில் ஏற்றிக் கூறுவது இவ் அணி என்பர்.

கோவலனும் கண்ணகியும் மதுரையை அடைகின்றனர். வையை நதியைக் கடக்க அதனைச் சார்கின்றனர். பூக்கள் நிறைந்த அந்த ஆறு தன் நீரைக் கரந்து செல்கிறது. கண்ணகி கோவலனுக்காக வருந்தும் வைகை தன் கண்ணிரை உள்ளடக்கி மறைத்துச் செல்வதைப் போல அதன் நீர் வெள்ளம் மறைந்து கிடக்கிறது என்று கூறுவார் கவிஞர்.

'வையை என்ற பொய்யாக் குலக்கொடி

தையற்கு உறுவது தான் அறிந்தனள்போல் புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக் கண் நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிச்'

செல்கிறது என்பர்.

மற்றும் அகழியில் மலர்ந்து இருந்த குவளையும், ஆம்பலும் தாமரையும் கண்ணகியும் கோவலனும் அடையப் போகும் துயரத்தை அறிந்தன போலக் கள் நீர் (கண்ணிர்) கொண்டு காற்று (கால்) உற நடுங்கின என்பர்.

பண்நீர் வண்டும் பரிந்து இணைந்து ஏங்கின என்பர்.

4,

'கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்

தையலும் கணவனும் தனித்து உறு துயரம் ஐயம் இன்றி அறிந்தன போலப் பண்ணிர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கிக் கண்ணிர் கொண்டு கால்உற நடுங்க” - புறஞ்சேரி

கொடிகள் மதில் மீது அசைந்து ஆடுகின்றன. அவை இவர்களைப் பார்த்து, 'வராதீர் திரும்பிப் போகவும்' என்று கூறி மறித்துக் கைகாட்டுவது போல அசைந்தன என்பார் கவிஞர். .

'போர் உழந்து எடுத்த ஆர்எயில் நெடுங் கொடி

5 *

வாரல் என்பன போல் மறித்துக் கை காட்ட

என்பார் கவிஞர்.