பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிநலன்கள 231

செல்லாட்சிகள்

கவிஞர் ஆளும் சொற்கள் புதுப்புதுப் பொருள்களைத் தருவன; சில தொடர்கள் கவிஞனுக்கே உரியன. அவற்றை எடுத்தாள்வது அவர் கருத்துப்படக் கூறும் கவின் வெளிப் படுகிறது. அவற்றுள் சில பின்வருமாறு :

'கவவுக்கை நெகிழாமல்தீது அறுக’ என்ற சொல் லாட்சியை மீண்டும் மாதவியை விட்டுக் கோவலன் பிரிவில் எடுத்தாளும் அழகைக் காண முடிகிறது.

"திங்கள் முகத்தாளைக் கவவுக்கை நெகிழ்ந்தவனாய்ப் போன பின்னர் எனக் கூறுவார்.

கண்ணகியைக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி என்று அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையில் கூறுவார். அதே தொடரை மாதவிக்கு எடுத்தாளுதல் காண முடிகிறது.

'கையற்ற நெஞ்சினளாய் வையத்தினுள் புக்குத்

தன்மனை புக்காள்' -

என்பர்.

'மண் தேய்த்த புகழினான்' என்று கோவலனைக் கூறும் கவிஞர் 'பண் தேய்த்த மொழியினார்' என்று மகளிரைக் கூறுவது சுவை பயப்பதாக உள்ளது. 'தேய்த்த' என்ற சொல்லாட்சி நயமுடையதாக உள்ளது.

அதே போல மற்றும் ஒரு தொடரினைக் காட்ட முடிகிறது.

'பவள வாள்துதல் திலகம் இழப்பத்

தவள வாள்நகை கோவலன் இழப்ப"

'இழப்ப' என்பது புதுப்புதுப் பொருளில் வருதல் காண முடிகிறது.

'ஈகைவான் கொடி அன்னாள்' என்று அவளைப் பொன்னுக்கு உவமிக்கின்றார். கண்ணகியைப் பாராட்டும் போது இருமுறையும் 'பொன்னே' என்று கோவலன்