பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 சிலப்பதிகாரம்

மறவாமல் கூறுகின்றான். மாதரி கண்ணகியைப் பற்றிக் கூறும்போது 'பொன்னிற் பொதிந்தேன்' என்று கூறுகிறான். தெய்வக் காட்சியில் சேரன் செங்குட்டுவன் பொன் கொடியாக அவளைக் காண்கிறான். 'பொன்' என்று அறிமுகப்படுத்திய அவளை மறவாமல் அதே சொல்லில் கூறுவது சிறப்புப் பெறுகிறது.

கண்ணகி அவள் நகைமுகம் ஒருமுறை அறிமுகப் படுத்தியவர் மறவாது அவளை அதே சொற்றொடரில் காட்டுவது அவர் தீட்டும் சித்திரம் மறவாமல் போற்றுவது ஆகிறது.

'பேதுறவு மொழிந்தனள், அரும்பினள் நிற்ப என்பாள் சாலினி கூற்றுக் கேட்டபோது.

நலங்கேழ்முறுவல் நகைமுகம் காட்டி 'சிலம்புள கொள்ளும்' என்று மகிழ்வுடன் தருகிறாள்

காதம் நடந்து களைத்துவிட்ட நிலையில் மதுரை மூதூர் எங்கே எவ்வளவு தூரம் என்று கேட்கும்போதும் அவள் நகைமுகத்தை மறவாமல் சித்திரிக்கிறார்.

'முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க' என்று கூறுவார்.

பிரிவின்கண் கோவலன் பெற்றோர்கள் விசாரிக்கிறார் கள். விருந்தினரைப் போற்ற முடியாமைக்கு வருந்தும் நிலையில் வலியச் சிரிக்க விரும்புகிறாள். 'வாயல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்தினர்' என்று கூறுவர்.

கண்ணகி கோவலனைப் பிரிந்த நிலையில் அவள் நகைச் சிரிப்பைக் கோவலன் இழந்துவிட்டான் என்று கூறுவது பொருள் பொதிந்ததாக உள்ளது. அந்த முறுவலுக்கு மாதவி தரும் இன்பம் ஈடாகாது என்று கூறுவதுபோல் அத்தொடர் அமைந்துள்ளது.

ஒரே கருத்து மூன்று இடங்களில் வற்புறுத்தக் காண்கிறோம்.

'தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி' என்று கவுந்தி அடிகள் உணர்த்துவார்.