பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 சிலப்பதிகாரம்

முடிகிறது. எல்லாத் துறைகளையும் நன்கு அறிந்து கூறுபவராக விளங்குகிறார்; மாதவி கால் முதல் தலை வரை அணியும் அணிகல்ன்களைக் கூறுவது வியப்பைத் தருகிறது. மதுரை அங்காடித் தெருவில் வைரக் கற்களின் குறைகள், சிறப்புகள், தரங்கள் இவற்றைக் காட்டுவது அவர் பேரறிவைக் காட்டுகிறது. அவருக்குத் தெரியாத துறையே இல்லை என்று கூற முடியும். எல்லாத் துறைகளைப் பற்றிய செய்திகள் இடம் பெறுவதால் காவியம் செறிவுமிக்கதாக விளங்குகிறது. நிறைவு உடையதாகவும் அமைந்துள்ளது.

அவர் தமிழ்ப் புலமை அவர் சொற்களை எடுத் தாளுவதில் விளங்குகிறது. ஒரு செய்தியைக் கூற எவ்வளவு சொற்கள் தேவையோ அவ்வளவும் கூறுவதில் அவர் புலமை காணப்படுகிறது.

நயம் மிக்க தொடர்கள் ஆங்காங்கே எடுத்தாளப் படுகின்றன. மாதவி எழுதிய காதற் கடிதம் அப்புலமைக்குத் தக்க சான்று ஆகும்.

'பவளவாள் நுதல் திலகம் இழப்பத்

தவள வாள் நகை கோவலன் இழப்ப"

என்ற தொடர், அதில் அவர் எடுத்தாளும் சொற்கள் அழகு

ஊட்டுவன ஆகும்.

'மண் தேய்த்த புகழினான், பண் தேய்த்த மொழியினார்

இங்குச் சொற்கள் சிறப்பாக ஆளப்பட்டுள்ளன.

கடுமையை உணர்த்தக் கண்ணகி வாயிற்காவலனிடம் உரைக்கும் சொற்கள் அவர் புலமைக்குத் தக்க எடுத்துக்காட்டு ஆகும்.

'அறிவு அறை போகிய பொறி அறு நெஞ்சத்து

இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே!

என்ற தொடர் வெறுப்பில் வந்த வெகுளிச் சொற்கள். அவை றகர எழுத்துத் தொடர்ந்து பெற்று ஒசை நயம் உண் டாக்குவதைக் காண முடிகிறது.