பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோவடிகள் 237 எந்தப் படைப்பும் செய்திகளால் மட்டும் நிறைவு பெறு

வதில்லை. அது உணர்த்தும் அறவுரைகளைக் கொண்டே

மதிப்பிடப் படுகிறது; அக்காவியம் நிலைபேறு பெறுகிறது.

கண்ணகி காவியம் என்று இதற்குப் பெயர் வைத் திருக்கலாம். அது ஒரு கருத்தை மட்டும் கூறியதாக முடியும். இதில் மூன்று கருத்துகள் இடம் பெறுகின்றன. பத்தினியை உயர்ந்தோர் புகழ்வது என்பது ஒன்று மட்டும் தான் காவியச் செய்தி. ஏனைய இரண்டும் அறவுரைகள் கூறும் பகுதிகள் என்று கூறலாம்.

'ஆட்சி அது வழி தவறினால் நீதி கெட்டால், செங்கோன்மை கெட்டால் நாடு சீரழியும் என்பது அவர் உணர்த்தும் அடிப்படையான கருத்து. நாட்டு அரசியல் ஒட்டித்தான் மக்கள் நல்வாழ்வு அமைகிறது. பாண்டிய நாட்டுச் சீர்குலைவு. ஆட்சியில் ஏற்பட்ட தவறு ஒன்றினால் என்பது வற்புறுத்தப்படுகிறது. மக்கள் கொதித்து எழுவார்கள், ஆட்சியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பது அவர் அறிவுரை.

மற்றொன்று ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது. இது காவியச் செய்தியே அன்று; கவிஞர் சொல்ல வந்த செய்தி. இங்கேதான் கவிஞர் தம்மைக் காட்டிக் கொள்கிறார். கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்தது நடைமுறைச் செய்தி; அதற்குக கூட விதி தான் காரணம் என்கிறார். வீட்டை விட்டு வெளியேறியது; பொற்கொல்லன் கோவலனைச் சந்தித்துக் கொலை உண்டது எல்லாம் ஊழ்வினையின் செயல்கள் என்று வற்புறுத்துகிறார். இந்திய நூல்கள் பெரும்பாலும் சமய அடிப்படையில் தோன்றி யவையேeாம. சமயக் கோட்பாடுகள் இல்லாமல் எந்த நூலும் இயங்குவது இல்லை.

இளங்கோவடிகள் அருக சமயத்தவர் என்பதை இந்த அறப்பிரச்சாரத்தால் காட்டி விடுகிறார்.

கவுந்தி அடிகளைக் கொண்டு சமணக் கோட்பாடுகளை ஆங்காங்குக் கூறக் காண்கிறோம். மாங்காட்டு மறையவனிடம்