பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோவடிகள் 239

அவர் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதில் சமயச் சார்பு அடிப்படையாகிறது. அவற்றில் நாம் கருத்து வேறுபாடு கொள்ள இடம் உண்டு; பிறப்பு, மறுபிறப்பு இந்த நம்பிக்கைகளை எல்லாம் அவர் நூல் வற்புறுத்துகிறது. கீதையைப் போல் இதுவும் கருமம், என்ற கோட்பாட்டை மிகுதியாக வற்புறுத்துகிறது. அது அவர் தனிப் போக்கு இந்த நாட்டின் பின்னணி இதில் எந்தச் சமயமும் விதி விலக்கு அன்று.

மற்றொன்று சாதிப் பாகுபாடுகளுக்கு இந்நூல் மிகுதியும் இடம் தந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. கோவலன் கண்ணகியை விளிக்கும் போதே, 'பெருங்குடி வணிகன்

  • *

பெருமட மகளே' என்று கூறுகிறான். அதில் பெருமையும்

கொள்கிறான்.

ஊரை விட்டுப் பூதங்கள் வெளியேறுகின்றன. அவற்றையும் சாதி அடிப்படையில் பிரித்துக் காட்டக் காண் கிறோம். கண்ணகி, கோவலன் இவர்கள் வணிகர் மக்கள் என்பதே கதை, உழவர்கள், ஆயர்கள், குறவர்கள், பரதவர், வேடுவர் என்று நிலத்துக் கேற்பச் சாதிகளைக் குறிப்பிடு கின்றனர். இவை அக்காலத்து நிலை; உள்ளதை உள்ளபடி கூறியிருக்கிறார் என்றே கொள்ள வேண்டும். அவர் சாதிப் பிரிவுகளை வற்புறுத்தவில்லை. அது இந்த நாட்டின் சமூக அமைப்பு எனினும் கதைகளில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சாதியினரை மேம்படுத்திக் கூறி இருப்பது இதன் தனித்தன்மை ஆகும். மாங்காட்டு மறையவன், கோசிகன், மாடலன், தேவந்தி, உள்ளே வரும் கதைகள், பராசரன், வார்த்திகன், கீரந்தை எல்லாம் ஒரு இனத்தைச் சார்ந்தவர்கள். வடநாடு செல்லும் போது முனிவர்கள் சேரனைச் சந்திக்கின்றனர். அங்கேயும் அங்குள்ள அந்தணர்களைப் போற்றுக என்று அறிவுரை கூறுகின்றனர். இறுதியில் மாடல மறையோன் உரையின் படி வேள்வியில் கதையை முடிப்பது சமயச் சார்பின் தாக்கம். அக்காலப் போக்கும் என்று கூற வேண்டி யுள்ளது. மாடலனுக்குத் துலாபாரம் புகுந்து பொன்தானம் தருகிறான்.