பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 மங்கல வாழ்த்துப் பாடல்

திறம் பாராட்டப்பட்டது. வடமீன் ஆகிய அருந்ததி அனையவள் என்று அவ் ஊர் மகளிர் அவளைப் பாராட்டினர்.

மாசாத்துவான்

அதே ஊரில் செல்வச் சிறப்பும், உயர்மதிப்பும் பெற்ற வணிகன் மற்றொருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் மாசாத்துவான் என்பது ஆகும். அவன் அரசனும் மதிக்கத்தக்க குடிமகன் என்று பாராட்டப்பட்டான். மாநாய்கனைப் போலவே வறியவர்க்கு வழங்குவதில் மிக்க புகழ் பெற்றிருந்தான். அவனுக்கும் ஒரே மகன் கோவலன் என்பான்; வயது பதினாறு ஆகியது. அவன் நற்குணத்தை அனைவரும் பாராட்டிப் பேசினர். அவன் அழகில் முருகன் என்று நங்கையர் மதித்துப் பாராட்டினர். அவனை 'மண்தேய்த்த புகழினான்' என்று இளங்கோ அறிமுகம் செய்கின்றார். உலகு எங்கும் அவன் புகழ் பேசப்பட்டது.

மண நிகழ்ச்சி

இரு குடியினரும் ஒரே குலத்தைச் சார்ந்தவர்; வணிகப் பெருமக்கள். இவர்கள் தம் மக்களுக்கு மணம் முடிக்கக் கருதினர். கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம் செய்விப்பதில் ஆர்வம் கொண்டனர். நாள் குறித்துச் செய்தியை நகரத்துக்கு அறிவித்தனர். அவர்கள் செல்வ நிலைக்கேற்ப மிகவும் ஆடம்பரமாகத் திருமணத்தை நடத்தினர்.

ஊரவர்க்குச் செய்தி அறிவிப்பதிலேயே அவர்கள் செல்வச் சிறப்பு வெளிப்பட்டது. யானையின் பிடரியில் அழகிய மகளிரை அமர்வித்து வெண் கொற்றக் குடைகள் புடை சூழச் சங்கும் முழவும் அதிர ஊர்வலமாகச் செல்ல வைத்தனர். அந்த ஊர்வலத்தில் மங்கலத்தாலியும் வைக்கப்பட்டது. மாநகர்க்கு ஈந்தார் மணம்' என்று கூறுவர் கவிஞர்.

நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து மணம் நடத்துவது அக்கால வழக்கமாக இருந்தது. புரோகிதரை வைத்தே திருமணம் நடத்தினர். சித்திரை மாதம் சந்திரன் உரோகிணியை அடையும் நாள் நன்முகூர்த்தமாக நிச்சயிக்கப்பட்டது. பந்தலிட்டு மண மேடையை அலங்கரித்தனர். வைரத் தூண்கள் பந்தலைத் தாங்கின. நீலப் பட்டாடை விதானமாக அமைந்தது. பூக் களையும், முத்து மாலைகளையும் சரங்களாகத் தொங்க