பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 245 விட்டனர். பூ இட்ட பந்தலில் முத்துகள் பதிக்கப் பெற்று இருந்தன.

மேடையில் கண்ணகியோடு கோவலன் அமர்ந்தான்; முன்னர் வேள்வித் தி எழுப்பினர். மணமகன் மணமகளைக் கைப்பிடித்துத் தீயை வலம் வந்தான். அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டு வலமாக வந்த காட்சி அங்கிருந்தவர் மனத்தை மகிழ்வித்தது. வியத்தகு காட்சியாகக் கொண்டனர்.

வாழ்த்துரை

அம் மண மண்டபத்தில் மங்கையர்கள் கலகலப்பாகச் செயல்பட்டனர். பூ அணிந்த மகளிர் பொலிவு ஊட்டினர். இளைய நங்கையர் அங்கு வளையச் சூழ்ந்து இருந்தனர். அவர்கள் மேனிஅழகு கண்ணைக் கவர்ந்தது. ஒசிந்த நோக்கு அவர்கள் கசிந்த ஆர்வத்தைக் காட்டியது. நறுமணம் பூசி அவர்கள் கவர்ச்சியோடு விளங்கினர். பாட்டும் உரையும் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தன.

தட்டுகளில் பூக்களையும், சுண்ணத்தையும், அணி வகைகளையும் தாங்கிச் சென்றனர். பூரண பொற்குடம் ஏந்தினர். ஒளிவிளக்கு ஏந்தினர். வண்ணம் ஏந்தினர். சுண்ணம் ஏந்தினர். பாலிகைக் குடம் தாங்கினர். எங்கும் மங்கலக் காட்சியைத் தங்க வைத்தனர்.

கூந்தலில் பூக்கள் சூடிய மங்கல மடந்தையர் ஆசி கூறினர். 'இருவரும் இணை பிரியாமல் வாழ்க' என்று வாழ்த்துக் கூறி அவர்கள் மீது மலர்களைத் தூவி நல்லமளியில் சேர்த்தனர்.

'அரசன் வாழ்க! அவன் ஆட்சி சிறக்க!' என்று வாழ்த்துக் கூறி அம் மணவிழா நிகழ்வினை முடித்தனர்.

2. இல்லற வாழ்க்கை (மனையறம்படுத்த காதை)

கண்ணகியும் கோவலனும்

'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது'

என்பார் வள்ளுவர். அவர்கள் அன்பு வாழ்க்கை இன்பத்தில் தொடங்கியது. காதலில் களித்துக் கவிதைபாடி அவன் சிறந்த