பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 247

இடம் மாறின என்பர் கம்பர். அது காதல்; கலவி இன்பம் அதைக் கூறும்போது ஒருவர் மற்றவர் ஆயினர் என்று கூறுவதே சிறப்பாகும். 'அவன் தாங்கிய செங்கழுநீர்த் தாரும் அவள் அணிந்திருந்த முல்லை மாலையும் தழுவிக் கலந்தன” என்று கூறினால் அது சிறப்பாக அமையும்.

தாரும் மாலையும் மயங்க அவன் தன் வசம் இழந்தான்; தன்னை இழந்தான்; அவள் பேரழகை வியந்து பாராட்டினான்.

நலம் பாராட்டல்

நெற்றியின் அழகு அவனுக்குப் பிறைச் சந்திரனை நினைவுக்குக் கொண்டு வந்தது; 'சிவன் தன் சடைமுடியில் தரித்திருந்த பிறையை அவளுக்குத் திருநுதல் ஆகுக என்று கொடுத்து விட்டான்' என்று பாராட்டினான்.

அவள் புருவங்களின் வளைவு அவனை வளைத்தது. காமன்வில் அதுபோலக் கணைகளைப் பொழிவது அவள் புருவங்கள்; மன்மதனின் வில் என முடிவு செய்தான். தன் கரும்பு வில்லினை அவளுக்குப் புருவமாகப் படைத்து அந்த மன்மதன்தான் தந்துவிட்டானோ' என்று வியந்தான்.

அவள் இடை மெலிந்திருந்தது; அது முறியாமல் உறுதியாக இருந்தது; "அது இந்திரன் தந்த வச்சிரப்படை'

எனறான.

அவள் கண்கள் வேல்கள் எனப் பாய்ந்தன. அவனுக்கு வேதனை தந்தன. அவை அவனைப் புண்படுத்தின. அதனால் தாக்கப் பெற்றான். 'அவை கண்கள் அல்ல; வேல்கள்' என்றான். 'முருகன் தன் வேலினை இரண்டாக உடைத்து அவற்றைக் கண்கள் இரண்டாக அமைத்து விட்டான்' என்று பேசினான்.

அவன் கற்பனைகள் எங்கெங்கோ செல்கின்றன. அவள் சாயல் மயிலை நினைப்பூட்டியது; நடை அன்னத்தைக் காட்டியது; இனிய மொழி கிளியை அழைத்தது.

"அவள் சாயல் கண்டு அதற்குத் தோற்று மயில் காடுகளை அடைந்துவிட்டது; அவள் நடைக்கு அன்னம் தோற்று நன்னிர்ப்