பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை

23

4. அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை நிலை மண்டில ஆசிரியப்பா மாலைப்பொழுது "விரிகதிள் பரப்பி, உலகம் முழுது ஆண்ட ஒருதனித் திகிரி உரவோன் காணேன்; அங்கணி வானத்து, அணிநிலா விரிக்கும் திங்கள் அம் செல்வன் யாண்டுஉளண் கொல்?" எனத் திசைமுகம் பசந்து, செம்மலர்க் கண்கள் முழுநீர் வார முழுமெயும் பனித்துத் திரைநீர் ஆடை இருநில மடந்தை அரைசு கெடுத்து, அலம்வரும் அல்லற் காலைக் கறைகெழு குடிகள் கைதலை வைப்ப, அறைபோகு குடிகளொடு ஒருதிறம் பற்றி வலம்படு தானை மன்னர் இல்வழிப் புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்தக் காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ்வு எய்தக் குழல்வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு மழலைத் தும்பி வாய்வைத்து ஊத, அறுகால் குறும்புஎறிந்து, அரும்புபொதி வாசம் சிறுகாற் செல்வன் மறுகில் துாற்ற, எல்வளை மகளிர் மணிவிளக்கு எடுப்ப, மல்லல் மூதுார் மாலைவந்து இறுத்தென திங்களின் தோற்றம் இளையர் ஆயினும், பகை அரசு கடியும் செருமாண் தெண்னவர் குலமுதல் ஆகலின், அந்தி வானத்து, வெண்பிறை தோன்றிப் புண்கண் மாலைக் குறும்பு எறிந்து ஒட்டிப் பாண்மையின் திரியாது பாற்கதிர் பரப்பி, மீண் அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து

25