பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை

அஞ்சனம் கண்களுக்குக் கருமை தந்தது. அதனைத் தீட்டுவதை விட்டாள். திலகம் இட்டு நெற்றியை முன்பு அழகு படுத்துவாள்; அது அவள் நெற்றியை விட்டு நீங்கிவிட்டது. அவள் சிரிப்பு கோவலனுக்கு மகிழ்ச்சியின் விரிப்பு: அதை அவன் இழந்துவிட்டான்.

கூந்தல் வாரி முடித்து மலர் இட்டு மகிழ்ந்திலள் அது நெய்யணிதலும் இழந்து வறண்டு உலர்ந்து கிடந்தது. கையறு நெஞ்சோடு அவள் வருந்திச் செயல் இழந்தாள். அடி முதல் முடி வரை அவள் ஒப்பனைகள் வெறும் சொப்பனமாக மறைந்தன. சோகத்தின் உருவமாக அவள் சோர்ந்து கிடந்தாள்.

ஏனைய மகளிர்

அந்த இரவுப்பொழுது கண்ணகியை மட்டும் வருத்த வில்லை; பெண்ணணங்குகள் பலரையும் வருத்தியது. வேனிற்பள்ளி வேதனை தரும் என்பதால் அவர்கள் கூதிர்ப் பள்ளியைத் தேடிச் சென்றனர். அதன் சாளரங்களில் தென்றல் வீசியது; பிரிந்திருந்த அவர்களை அது சுட்டது; வெம்மைப் படுத்தியது; புழுக்கத்தைத் தந்தது. அதனால் காற்றும் புகாதபடி அவற்றின் கண்களை அடைத்தனர். மாலை முத்தும், சந்தனக் கொத்தும் அவர்களுக்குக் குளிர்ச்சி தருவன; அவை அவர்களுக்கு வேதனையைத் தந்தன. அதனால் அவற்றை அணிவதைத் தவிர்த்தனர். குவளையும், கழுநீர்ப் பூவும் குளிர்ச்சியை அளிப்பன. அவற்றைத் தூவிப் படுக்கையில் படுப்பது வழக்கம். பூவின் அடுக்கு அவர்களுக்கு இடுக்கண் தந்தது. மகிழ்வை வெறுத்தனர். வெம்மைமிக்க அன்னத் தூவி விரித்த விரிப்பில் தம் இரவைக் கழிக்க விரும்பினர். அங்கும் அவர்கள் கண்கள் துயில மறுத்தன. துயிலின்றி வருந்தினர்; வறண்ட வாழ்க்கை அவர்களுக்கு வெறுப்பைத் தந்தது. அந்த இரவு அவர்களுக்குப் பகையாக விளங்கியது. ஊடல் காலத்தில் சினந்து சிவக்கும் அவர்கள் கண்கள் இந்த வாடல் காலத்தில் முத்துக்கள் என நீர் உகுத்துச் சிந்தின; தனிமை அவர்களை வாட்டியது.

புகார் நகர் மகளிர்

இப்படி ஒரு சிலர் வருந்தினர்; எனினும் பலருக்கு அது

இன்ப இரவாகவே விளங்கியது. மன்மதனின் படைகள் மகளிர்