பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 இந்திர விழவு ஊர் எடுத்த காதை

செய்வோரும், தொழில் செய்வோரும் வாழ்ந்த பகுதி அது; மற்றையது உயர் குடிமக்கள் வசித்த இடமாகும்.

மாடி வீடுகளும், அழகுமிக்க இருக்கைகளும், மான் கண் போன்ற சன்னல்கள் வைத்த மாளிகைகளும், பொய்கைக் கரைகளில் கவர்ச்சிமிக்க யவனரது வீடுகளும், வேற்று நாட்டவர் வசிக்கும் நீர் நிலைகளின் கரைகளில் கட்டி இருந்த வீடுகளும் அந் நகரை வளப் படுத்தின, அழகு தந்தன.

தெருக்கள் தனித்தனியே இன்ன இன்ன தொழிலுக்கு 6TᎧᏈᎢ வகைப்படுத்தி இருந்தனர்; நறுமணப் பொருள் விற்போர் ஒரு தனித்தெருவில் குடி இருந்தனர். நூல் நெய்வோர் தனிவீதியில் இருந்தனர். பட்டும், பொன்னும், அணி கலன்களும் விற்போர் தனிவீதியில் தங்கி இருந்தனர். பண்டங்கள் குவித்து விற்றவர் தெரு கூலவீதி எனப்பட்டது. அப்பம் விற்போர், கள் விற்போர், மீன் விலைபகர்வோர், வெற்றிலை வாசனைப் பொருள்கள் விற்போர், இரைச்சி, எண்ணெய் விற்போர், பொன் வெள்ளி செம்புப் பாத்திரக் கடைகள் வைத்திருப்போர், பொம்மைகள் விற்போர், சித்திரவேலைக்காரர், தச்சர், கம்மாளர், தோல் தொழிலாளர், விளையாட்டுக் கருவிகள் செய்வோர், இசை வல்லவர்கள், சிறு தொழில் செய்பவர்கள் இவர்கள் எல்லாம் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தனார். இந்தப் பகுதி மருவூர்ப் பாக்கம் எனப்பட்டது.

பட்டினப் பாக்கம்

அடுத்தது பட்டினப்பாக்கம்; உயர்நிலை மாந்தர் வசித்த பகுதி இது. அரசவீதி, தேர்வீதி, கடைத்தெரு, வணிகர் தெரு, அந்தணர் அக்கிரகாரம், உழவர் இல்லம், மருத்துவர், சோதிடர், மணிகோத்து விற்பவர், சங்கு அறுத்து வளையல் செய்வோர் ஆகிய இவர்கள் தனித்தனியே வசித்து வந்தனர்.

காவற்கணிகையர், ஆடற் கூத்தியர், பூவிலை மடந்தையர், ஏவல் பெண்கள், இசைக்கலைஞர்கள், கூத்தாடிகள் இவர்கள் எல்லாம் ஒருபகுதியில் வாழ்ந்தனர்.

அரசன் அரண்மனையைச் சுற்றிப் படை வீரர்கள் குடியிருப்புகள் இருந்தன. யானை, குதிரை, தேர், காலாள் வீரர்கள் இங்குக் குடி இருந்தனர். இப்பகுதி கடற்கரையை ஒட்டி இருந்தமையால் இது பட்டினப்பாக்கம் எனப்பட்டது. முன்னது