பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 261

நிகழ்ச்சிகளைக் காணத் தொலைதுாரம் கடந்து வந்தனர்; அவர்களுள் ஒருவன் வித்தியாதர வீரன்.

அவன் தன் காதலியோடு சோலை ஒன்றில் காம விளையாட்டில் மகிழ்வு கண்டான். அவளோடு உரையாடி இந்திர விழாவைப்பற்றி விளங்கக் கூறினான்.

y

'சித்திரை மாதம்,சித்திரை நாள் இன்று அந்த இந்திர விழா' என்று எடுத்துக் கூறினான்.

அங்குத் தாம் காண இயலும் காட்சிகளை எடுத்துக் கூறி அவளை உடன் அழைத்து வந்தான்.

இந்திரன் கட்டளையால் புகார் நகரில் தங்கிவிட்ட காவல் பூதத்துக் கோயில் முன்பு ஆண்டுக்கொருமுறை இந்திர விழா நாள் அன்று வீரர்கள் தம்மைப் பலி இட்டுக் கொள்ளும் காட்சி வியப்புடையது என்று கூறினான். 'அந்தப் பலிப் பீடிகையைக் காணலாம் வருக' என்று கூறினான்.

'மற்றும் ஐவகை மன்றங்களின் அருமை பெருமைகளை நேரில் காண இயலும்' என்றான்.

'இந்திரன் அவையில் சாபம் பெற்றுப் புகாரில் பிறந்த ஊர்வசியின் மரபில் வந்த மாதவியின் ஆடலையும் காண்போம்” என்றான்.

வித்தியாதரன் வருகை

இருவரும் வெள்ளிமால் வரையில் இருந்து புறப்பட்டு இமயத்தைக் கடந்து வந்தனர். தேயங்கள் பலவற்றை அவளுக்குக் காட்டி அழைத்து வந்தான். செழுமையான கங்கை பாய்வதை அவளுக்குக் காட்டி மகிழ்வித்தான். உஞ்சைமா நகரத்தையும், விஞ்சைமா அடவியையும், வேங்கட மலை யையும், காவிரிநாட்டையும் காட்டிய பின்னர்ப் பூம்புகார்க்கு அழைத்து வந்தான்; அங்கங்கே இருந்த கோயில்களைத் தொழுதவனாகி அவளுக்குக் காட்டிக் கோயில் விழாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் உணர்த்தினான்.

அதன்பின் அவன் பெரிதும் புகழ்ந்து பேசிய மாதவியின் ஆடல் நிகழ்ச்சியை அவளுக்குக் காட்டத் தொடங்கினான்.