பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 263

அசுரர்கள் தாம் தாங்கிய போர்க் கோலத்தைத் தவிர்த்து ஒடத் துர்க்கை வெற்றி கொண்ட செய்தி "மரக்கால் ஆடல்' எனப்பட்டது.

அதேபோல அவுணரை எதிர்த்துத் திருமகள் வெற்றி கொண்ட செய்தியைச் செப்புவது 'பாவைக் கூத்து' எனப் பட்டது.

வாணன் ஊரில் வடக்கு வாயிலில் இந்திராணி வெற்றி கொண்ட செய்தி 'கடையம்' எனப்பட்டது.

இப்பதினொருவகை ஆடல்களையும் மாதவி அவ்வவ் வேடங்களில் அவ்வம் மரபுகள் வழுவாமல் நடித்து நாட்டியம் ஆடி நாட்டவரை மகிழ்வித்தாள் நடிப்பு இது; வாழ்க்கை அவளை அழைத்தது.

கலை உலகில் அவள் தன் தொழிலைத் திறம்படச் செய்து இந்த உலகினரை மகிழ்வித்தாள். கோவலன் ஊடற் குறிப்போடு இருந்தான்; அவளைக் கூடி மகிழக் காத்து இருந்தான்.

மாதவியின் ஒப்பனை

காதலன் அவனை மகிழ்விக்க அவள்தன் இயல்பு நிலைக்கு வந்தாள். ஒப்பனை அவள் உடன் பிறந்தது; அவன் கலாரசிகன்; அழகை ஆராதிப்பவன். கோலம் செய்து அவனை மகிழ்விக்க விரும்பினாள். அவள் தன்னை ஒப்பனை செய்து கொள்வதே தனிக் கற்பனையாக இருந்தது.

கூந்தலை நறுமணம் கலந்த நீரில் குளிப்பாட்டினாள். நறும்புகை கொண்டு உலர்த்தினாள். கால் அடிமுதல் தலை முடிவரை அவள் பலவகை அணிகளைப் பூண்டாள். இங்கே அவனுக்கு மாதவியாகக் காட்சி அளித்தாள். கால்விரலுக்குக் கணையாழிகள், கணைக்காலுக்குச் சிலம்பு வகைகள்; தொடைக்குச் செறிதிரள் என்னும் அணி முத்துப்பதித்த மேகலை அவள் இடைக்கு அணிந்தாள். தோளுக்குக் கண்டிகை, வயிரம் பதித்த சூடகம்; மற்றும் பல்வகை வளையல்கள் அவள் கைகளில் அணிந்தாள், கைவிரலுக்கு மகரமோதிரம்; கழுத்துக்குப் பொன் சங்கிலியும் முத்து ஆரமும் அணிந்தாள், செவிக்குக் கடிப்பு: தெய்வஉத்தி, தொய்யகம் முதலியன அவள் தலைக்கு அணிந்தாள். இத்தகு ஒப்பனைகளோடு அவன் மகிழ