பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 267

அவன் செங்கோன்மை, வெற்றிச் சிறப்புகள், அருள் தன்மை இவை காரணம் என்கிறாள். எனவே ஆண்கள் செம்மையாகவும், மகளிர்பால் நேயம் மிக்கவராகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவிக்கிறாள். இவை குறிப்பாக உணர்த்தப்படும் கருத்துகள் ஆகின்றன.

ஆண்கள் தவறு செய்தாலும் பெண்கள் பொறுப்பது தான் தக்கது என்பது கோவலனின் வாதம் ஆகிறது.

கானல்வரிப் பாடல்கள் (கோவலன்)

ஆற்று வரியைத் தொடர்ந்து அவன் கானல் வரிப் பாடல்கள் பாடினான்; அவற்றிலும் இத்தகைய முரண்பாடுகள் அமைந்துவிடுகின்றன.

தலைவன் களவு ஒழுக்கத்தில் அவளைச் சந்தித்துத் தன் காதலைத் தெரிவிக்கிறான். அச் செய்திகளைத் தோழி விவரிக்கின்றாள்.

'தலைவியின் முன் கடல் தெய்வத்தைச் சான்றாகக் காட்டித் தலைவன் தன் உறுதியை உரைத்தான். அவன் பின் அவளைத் தொடர்ந்து மணம் செய்து கொள்ளவில்லை' அதைச் சுட்டிக் காட்டுகிறாள் தோழி.

காதலராகிக் கடற்கரைச் சோலையில் கையுறை தந்து எம்பின்னால் வந்தவர் இன்று யாரோ போல் நடந்து கொள்கிறார்' என்பதும் தோழியின் அறிவிப்பு.

'நாங்கள் வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பி விடுபவர்கள்; மற்றும் மறுத்துக் கூறும் ஆற்றலும் எங்களுக்கு இல்லை' என்கிறாள் தோழி.

இம்மூன்றும் தலைவன் தலைவியரின் காதல் அறிமுகச் செய்திகள் ஆகின்றன; இவை தோழியின் கூற்றில் அறிவிக்கப்படுகின்றன; பின்பு நடந்தது யாது?

தலைவியின் பெருமையைத் தலைவன் விரித்துரைப்பன பின் வரும் பாடல்கள். இவை தலைவன் கூற்றுகள்:

கண் செய்த நோய் அவள் அணைப்புதான் தீர்க்கும்; நோய்க்கு அவள் காரணம்; அது தீர்க்கும் மருந்து அவள் முயக்கே ஆகும்'