பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை

25

பிறமகளிர் காதலர்ப் பிரிந்த மாதர் நோதக ஊதுஉலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி, வேனிற் பள்ளி மேவாது கழிந்து, கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து, மலயத்து ஆரமும் மணிமுத்து ஆரமும் அலர்முலை ஆகத்து அடையாது வருந்தத் தாழிக் குவளையோடு தண்செங்கழுநீர் வீழ்பூஞ்சேக்கை மேவாது கழியத் துணைபுணர் அண்னத் துாவியிற் செறித்த

இணை அணை மேம்படத் திருந்துதுயில் பெறா அது, உடைப்பெருங் கொழுநரோடு ஊடற் காலத்து

இடைக்குமிழ் எறிந்து. கடைக்குழை ஒட்டிக், கலங்கா உள்ளம் கலங்கக் கடைசிவந்து

விலங்கிநிமிர் நெடுங்கணி புலம்புமுத்து உறைப்ப

மண்மதன் ஆட்சி அன்ன மென்னடை நண்ணிர்ப் பொய்கை ஆம்பல் நாறும் தேம்பொதி நறுவிரைத் தாமரைச் செவ்வாய்த் தண்ணறல் கூந்தல் பாண்வாய் வண்டு நோதிறம் பாடக் காண்வரு குவளைக் கண்மலர் விழிப்பப் புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து முள்வாய்ச் சங்கம் முறை முறை ஆர்ப்ப உரவுநீர்ப் பரப்பின் ஊர்துயில் எடுப்பி இரவுத் தலைப்பெயரும் வைகறை காறும் அரையிருள் யாமத்தும் பகலும் துஞ்சான் விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி மகர வெல்கொடி மைந்தண் திரிதர நகரங் காவல் நனிசிறந்தது எண்.

வெண்பா

60

65

70

75

80

84

கூடினார்.பால் நிழலாய்க் கூடார்.பால் வெய்யதாய்க் காவலன் வெண்குடைபோற் காட்டிற்றே - கூடிய மாதவிக்கும் கண்ணகிக்கும் வானூர் மதிவிரிந்து போதுஅ விழ்க்கும் கங்குற் பொழுது.