பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 271

§ {

இனிக் கூறுவன தோழியின் கூற்றுகள்: கடல் சேர்ப்பனே! இவள் நெஞ்சு மன்மதன் அம்புகளால் துளைக்கப் பட்டுவிட்டது. இந்தப் புண் அதனை அவள் அன்னை அறிந்தால் அவளுக்கு யாது கூறுவது?”

'மாரிக் காலத்துப் பீர்க்கம்பூ போல் பூத்தது பசலை; தெய்வத்திடம் முறையிட்டு இந்நோய் தீர வழிபடுவாள் அன்னை. யார் இக் கொடுமை செய்தது என்று கேட்டால் என்ன பதில் கூறுவது?"

'தனிமையில் தலைவி துன்பம் அடைந்து தளர்வாள்; இதனை அவள் வாய்விட்டுக் கூறமுடியாமல் தவிப்பாள்; அன்னைக்கு இதனை எப்படி எடுத்துக் கூற முடியும்?”

இக்கூற்றுகள் தோழி கூற்றாக அமைந்துள்ளன. மாலைப் பொழுது தலைவியை வாட்டுகிறது; இதே நிலை தலைவனுக்கு உளதாகுமோ என்று இனித் தலைவி கேட்கிறாள்.

"மெல்ல இருள் பரந்தது; சூரியன் மறைந்துவிடக் கண்கள் நீர் உகுக்கின்றன; தோழி! இதே மயக்கம் தரும் மாலைப்பொழுது பிரிந்தவர் உறையும் நாட்டில் உள்ளதோ'

'கதிரவன் மறைந்தான்; காரிருள் பரந்தது; என் கண்கள் துன்பக் கண்ணிர் உகுக்கின்றன; இதே போன்ற மருள்மாலை அவர் நாட்டிலும் உள்ளதோ கூறுவாயாக'

"பறவைகள் பாட்டொலி அடங்கிவிட்டது; பகலைச் செய்யும் சூரியன் மறைந்து விட்டான்; என் கண்கள் நீர் உகுக்கின்றன. இதே மாலைப்பொழுது பிரிந்த அவர் நாட்டிலும் உள்ளதோ'

பிரிந்த நிலையில் அவள்தான் அடையும் துன்பத்தை எடுத்துக் கூறுகிறாள்: "அவர் எம்மை மறக்கலாம்; ஆனால் அவரை யாம் மறக்க முடியாது' என்ற கருத்தை வற்புறுத்திக் கூறுகிறாள்.

'தாழை வேலி உடைய உப்பங்கழிக்கு வந்தவர் எம்மைப் பொய்தல் விளையாட்டில் சந்தித்துப் பழகி அழைத்துச் சென்றார். அவர் நம் மனம் விட்டு அகலமாட்டார்”