பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 கானல் வரி

'நீ நல்குக என்று நின்றவர் அவர் மான்போன்ற மருண்ட நோக்கத்தை மறக்கமாட்டார்”.

'அன்னம் தம் துணையோடு ஆட அதனைக் கண்டவர் என்னையும் நோக்கினார்; என்னை வருந்தச் செய்து அகலமாட்டார்”

'நாரையே, நீ என் தலைவனுக்கு என் துன்ப நோயை எடுத்து உரைக்க மறுக்கிறாய்; எனக்கு நீ உதவவில்லை; நீ இங்கே வந்து என்னை அடையாது விலகுக; விலகிச் செல்க'

இவை தலைவி தன் துயரத்தை எடுத்து உரைப் பனவாகும்; கானல் வரிப்பாடல்கள் மாதவி பாடி முடித்தாள்.

வேறு ஒரு புதிய பண்ணில் தொடர்ந்து சில பாடல்களைப் பாடினாள். கைக்கிளை சேர்ந்த செவ்வழிப் பாலைப் பண்ணைப் பாடிமுடித்த பின்னர் மாலைப் பொழுது கண்டு மயங்கித் தலைவி தெரிவிக்கும் செய்திகளை அவள் தொடர்ந்து பாடினாள்.

'பிரிந்தவர் பரிவுடன் உரைத்த சொற்களை நம்பி உயிர் பெற்று வாழ்கின்றோம்; எங்கள் உயிரை நீ போக்க முற்படுகிறாய். மாலைப்பொழுதே! நீ எங்கள் உயிரைக் கொள்வாயா! நீ வாழ்க’

'பிரிவுத் துயரால் உயிர் வாழ முடியாமல் தவிக்கின்றோம்; மேலும் எங்களை நீ வதைக்கிறாய்; இந்த உலகம் வாழும் இடமாக இல்லை; மாலைப்பொழுதே! நீ தரும் துன்பம் மிகப் பெரிது; நீ வாழ்க’

"தீயைக் கக்கிக்கொண்டு வருகிறது இந்த மயக்கம் தரும் மாலைப் பொழுது, மாக்கடல் தெய்வமே! உன்னை முன்னிறுத்தி விரைவில் வருவதாகச் சொல்லிப் பிரிந்தார்; அவர் பொய்ச் சூளாகிய சொற்களை அவர் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது; நாங்கள் பொறுத்துக் கொள்கிறோம். தெய்வமே நீ அவரை மன்னித்துவிடு; உன் மலர் அடியை வணங்குகிறேன்' - இது தலைவியின் வேண்டுகோள் ஆகிறது.

உறவு முறிதல்

தலைவன் கொடுமை செய்துவிட்டான் என்ற கருத் தமைந்த பாடல்கள் கோவலனை வருத்தமுறச் செய்தன;