பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 வேனிற் காதை

மாதவிபால் கோவலன் கொண்ட ஊடல் அவளைப் பெரிதும் தாக்கியது; அவள் தனிமை அவளை வாட்டியது. தன் மனையகத்தில் அவள் வேனிற் பள்ளியாகிய நிலா முற்றத்திற்குச் சென்று அங்குத் தனிமையில் யாழ் வாசிக்கத் தொடங்கினாள். வாய்விட்டும் பாடினாள்; அவளால் அந்த இசையில் ஈடுபட முடியவில்லை; இசையில் அவள் மனம் நாடவில்லை.

மாதவி முடங்கல்

கோவலனின் நினைவு அவளை வாட்டத் தொடங்கியது. அவள் தன் கையகத்து இருந்த பூ மாலையை எடுத்தாள். அதில் பல்வகை மலர்கள் இருந்தன. அவற்றுள் தாழை மடலைத் தனித்து எடுத்தாள். பித்திகை முகையை எழுத்தாணியாகக் கொண்டாள். செம்பஞ்சுக் குழம்பு அதனை மையாகக் கொண்டாள்.

'இளவேனில் பருவம் ஆகிய இளவரசன் உயிர்களுக்கு மகிழ்வு ஊட்டுபவன்; அதோடு மாலைப்பொழுதில் தோன்றும் வானத்துத் திங்கள் கொடியது; தம் தலைவரைப் பிரிந்த மகளிரை வாட்டுவது மன்மதன் செயலாகும். இதனை யான் உணர்த்தத் தேவை இல்லை; இதனை அறிந்து அருள்வீராக” என்று வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு வடித்து எழுதினாள். காதல் வயப்பட்ட அவள் மழலைச் சொல் போல் வார்த்தைகளை விட்டுவிட்டுக் கூறி எழுதி முடித்தாள். பசந்த மேனியை உடைய தன் தோழியாகிய வசந்த மாலையை வருக என்று அழைத்து அதனைத் தந்து அனுப்பினாள். இந்த முடங்கலில் சொல்லிய செய்திகளைக் கோவலனுக்கு அறிவித்து அவனை இருந்து அழைத்து வருக எனச் சொல்லி அனுப்பினாள்.

வசந்தமாலை அதனை எடுத்துச் சென்று கோவலனைக் கூல மறுகு ஆகிய கடைத்தெருவில் சந்தித்துத் தந்தாள்; அவன் அதை வாங்க மறுத்தான். மாதவியைப் பற்றிய பழைய நினைவுகள் அவன் மனக்கண் முன் வந்து மோதின.

கோவலன் மறுப்பு

அவள் செயல்கள் ஒவ்வொன்றும் நடிப்பே என்று

கூறினான். அவளுக்கு வாழ்க்கையே நாட்டியக் கலையின்

கூறுகள் என்று சுட்டிக் காட்டினான். தன்னோடு காதல் உரைகள்