பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 275

பேசியது 'கண் கூடுவரி' என்றான். அவள் செய்து கொண்ட ஒப்பனைகள் எல்லாம், 'காண்வரிக் கோலம்' என்றான். ஊடல் கொண்ட போது அடங்கியவளாய் ஏவல் மகளைப் போல் அடக்க ஒடுக்கமாகப் பணிந்து பேசியது 'உள்வரியாடல்' என்றான். தன்னைத் தணிவித்த பொழுது முதுகு புறம் வந்து அணைத்தது 'புன் புறவரி'என்றான். மற்றும் அவன் ஊடல் செய்கைகள் அனைத்தும் கிளர் வரிக்கோலம்' என்றான்; மேலும் தேர்ச்சிவரி' 'காட்சிவரி', 'எடுத்துக் கோள்வரி' என்று பெயர்கள் தந்து அவள் செயல்களை எல்லாம் நடிப்பு என்று கடிந்து கூறினான்.

அவள் ஆடல் மகள் ஆதலின் இவை எல்லாம் அவளுக்குக் கூடிவந்த கலைகள் என்று கூறிச் சாடினான். அதே போல இந்த முடங்கலும், அதன் செய்திகளும் போலிகள் என்று கூறி மறுத்தான்.

வசந்த மாலை அவள் என்ன செய்யமுடியும்? வாடிய உள்ளத்துடன் சென்றாள். மாதவிபால் வந்து செய்தியை அறிவித்தாள். 'இன்று மாலை வராவிட்டாலும் அவரை நாளைக் காலையில் காண்போம்' என்று நம்பிக்கையுடன் அன்று மாதவி துயிலின்றிக் கழித்தாள்.

9. கோவலன் வீடு திரும்புதல் (கனாத்திறம் உரைத்த காதை)

தேவந்தி அறிமுகம்

புகார்நகரம் மாலைப்பொழுது மங்கலமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது; வீடுகள் பொலிவுடன் விளங்கின. வீட்டு முற்றத்தில் பூவும் நெல்லும் தூவி அழகுபடுத்தினர். வீடுகளுக்கு விளக்கேற்றி வைத்தனர். அந்த மாலைப் பொழுது தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண் கண்ணகிக்கு ஆறுதல் கூறத் தொடங்கினாள்.

இந்தத் தேவந்தி வாழ்க்கைப்பட்ட வீடு ஒரு பின்னணியைக் கொண்டு இருந்தது. இவளை மணந்தது பாசாண்டச் சாத்தன் என்னும் தெய்வம்; அந்த வீட்டில் அத் தெய்வம் ஆகிய சாத்தன் வளர்ந்து வயதுக்கு வந்து உரிய