பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 கனாத்திறம் உரைத்த காதை

வாலிபப்பருவத்தில் இவளைமணம் செய்து கொண்டான். இது விசித்திரமான கதை.

மாலதி என்பவள் ஒருத்தி தன் மாற்றாளின் குழந்தைக்குப் பால் ஊட்ட அது விக்கிச் செத்தது. அந்தப் பழி தன் மீது வரும் என்று அஞ்சி அவள் ஊரில் உள்ள பல கோயில்களுக்கும் சென்று அக்குழந்தையைக் கிடத்தி உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டினாள். பின்பு பாசண்டச் சாத்தனுக்கு உரிய கோயிலை அடைந்தாள். அங்கே அவள் வரம் வேண்டிப் பாடு கிடந்தாள்.

அங்கே இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய் ஒன்று வந்து, 'தவம் செய்யாதவர்க்குத் தேவர்கள் வரம் தர மாட்டர்கள்' என்று கூறிச் செத்த குழந்தையைக் கையால் பற்றிச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று தன் வயிற்று அகத்து இட்டு விழுங்கி விட்டது.

உயிர் நீங்கிய உடலும் அடையாளத்துக்குக் கூட இல்லாமால் போய் விட்டது. இடி உண்ட மயில் போல் துடிதுடித்தாள் ஏங்கி அழுதாள்.

'அன்னையே நீ அழாதே' என்று கூறிப் பக்கத்தில் ஒரு சோலையில் கிடந்த ஒரு குழந்தையைக் காட்டி "எடுத்துச் செல்க' என்று அத்தெய்வம் கூறியது. பாசாண்டச் சாத்தனே அக்குழந்தை வடிவாகியது. மாற்றுக் குழந்தை கிடைத்தவுடன் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்று தன் பழியைப் போக்கிக் கொண்டாள்.

அந்தக் குழந்தை வளர்ந்து கல்வி பெற்றுப் பெரியவன் ஆகி அந்தக் குடும்பத்துப் பொறுப்புகளை ஏற்று வாலிபன் ஆயினான். தாயத்தாரோடு சொத்து உரிமைக்கு வழக்குத் தொடுத்து அப்பெற்றோர்கள் மறைந்த பிறகு அவர்களுக்கு உரிய கடமைகளைச் செய்து மணமும் செய்து கொண்டான். தேவந்தி என்பாள் அவன் வாழ்க்கைத் துணைவியாயினாள்.

நாள்கள் சில நகர்ந்தன. அவளோடு நீடித்து வாழாமல் தான் தெய்வம் என்பதை அவளுக்கு உணர்த்தி 'எம்முடைய கோயிலுக்கு நீ வா' என்று கூறிச் சென்றான்; ஊரவர்க்குப் பதில் கூற வேண்டும். தேசாந்திரம் சென்ற கணவன் திரும்பி வருவதற்காகத் தான் கோயில் சென்று வழிபடுவதாகக் கூறி வழிபாடுகள் மேற்கொண்டு வந்தாள்.