பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சிலப்பதிகாரம்

5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை நிலை மண்டில ஆசிரியப்பா கதிரவன் உதயம் அலைநீர் ஆடை, மலைமுலை ஆகத்து. ஆரப் பேரியாற்று, மாரிக் கூந்தல், கண்ணகல் பரப்பின் மண்ணக மடந்தை புதையிருள் படாஅம் போக நீக்கி, உதய மால்வரை உச்சித் தோன்றி, 5 உலகுவிளங்கு அவிர் ஒளி மலர்கதிர் பரப்பி

மருவூர்ப் பாக்கம் வேயா மாடமும், வியன்கல இருக்கையும் , மாண்கண் காலதர் மாளிகை இடங்களும்; கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும் பயன் அறவு அறியா யவனர் இருக்கையும் , 10 கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்கள் கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும் , வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும், பூவும், புகையும், மேவிய விரையும் பகள்வனர் திரிதரு நகர வீதியும் , 15 பட்டினும், மயிரினும், பருத்தி நூலினும் கட்டு நுணிவினைக் காருகள் இருக்கையும்; து.ாசும் துகிரும், ஆரமும், அகிலும், மாசு அறு முத்தும், மணியும், பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா 20 வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும் , பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல விதியும் காழியர், கூவியர், கள்நொடை ஆட்டியர், மீன்விலைப் பரதவர். வெள்உப்புப் பகருநர். 25 பாசவர், வாசவர், பல்நிண விலைஞரோடு ஒசுநர் செறிந்த ஊண்மலி இருக்கையும் ,