பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திர விழவு ஊர் எடுத்த காதை

கஞ்ச காரரும், செம்புசெய் குநரும் மரம்கொல் தச்சரும், கருங்கைக் கொல்லரும், மண்ணுள் வினைஞரும், மண்ணிட்டு ஆளரும் பொண்செய் கொல்லரும், நண்கலம் தருநரும், துண்ன காரரும், தோலின் துன்னரும், கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப், பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும் , குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும்

அரும்பெறல் மரபின் பெரும்பாணன் இருக்கையும் ,

சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்

பட்டினப்பாக்கம் கோவியல் வீதியும், கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும். பெருங்குடி வாணிகள் மாட மறுகும்; மறையோர் இருக்கையும்; வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதரும், காலக் கணிதரும் பால் வகை தெரிந்த பண்முறை இருக்கையும்; திருமணி குயிற்றுநர், சிறந்த கொள்கையொடு அணிவளை போழுநர் அகண்பெரு விதியும்; சூதர், மாகதர், வேதா ளிகரொடு நாழிகைக் கணக்கள். நலம்பெறு கண்ணுளர், காவற் கணிகையர், ஆடற் கூத்தியர் பூவிலை மடந்தையர், ஏவற் சிலதியர், பயில்தொழில் குயிலுவர், பண்முறைக் கருவியர், நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும் , கடும்பரி கடவுநர், களிற்றின் பாகள், நெடுந்தேர் ஊருநர், கடுங்கண் மறவர் இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும்; பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்

35

40

45

50

55