பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 காடுகாண் காதை

மூன்று வழிகள்

'நீங்கள் இந்தக் கடும் வெய்யிலில் காரிகை இவளுடன் புறப்பட்டு வந்துள்ளிர்; குறிஞ்சியும் முல்லையும் தம் நல்லியல்பு திரிந்து பாலை என்று இந்நிலப் பகுதிகள் வடிவம் கொண் டுள்ளன. இந்த நெடுவழியைக் கடந்து சென்றால் கொடும்பாளுர் என்னும் ஊரில் நெடுங்குளம் ஒன்று வரும்; அங்குச் சிவன் ஏந்தி நிற்கும் சூலத்தைப் போல அதன் கரையில் மூன்று வழிகள் கிளைக்கின்றன.

வலது புறம்

இதன் வலப் பக்கம் சென்றால் மராம், ஒமை, உழிஞ்சில், மூங்கில், காய்ந்து கிடக்கும் மரம் முதலியன உள்ள காடு உள்ளது. நீர் வேட்கையால் மான்கள் கூவி விளிக்கும் காட்டையும், எயினர் குடியிருப்பையும் கடந்தால் ஐவனம் என்னும் நெல்லும், கரும்பும், தினையும், வரகும், வெள்ளுப்பும், மஞ்சளும், கவலைக் கொடியும், வாழை, கமுகு, தெங்கு, மா, பலாவும் சூழ்ந்த தென்னவன் சிறுமலை தோன்றும். அம்மலையை வலமாகக் கொண்டு சென்றால் மதுரை யம்பதியை அடையலாம்' என்றான்.

இடப் புறம்

'அவ்வழி செல்லாமல் இடப்பக்கம் சென்றால் வயல் களும் சோலைகளும் உடைய வழியைக் கடந்தால் திருமால் குன்றத்தை அடைவீர். அங்கே மயக்கம் கெடுக்கும் பில வழி ஒன்று உண்டு. இப் பில வழியில் சென்றால் புண்ணிய சரவணம், பவகாரணி இட்டசித்தி என்ற பெயர் பெற்ற மூன்று

பொய்கைகளைக் காண முடியும்'.

'அவற்றுள் புண்ணிய சரவணம் ஆகிய பொய்கையில் நீராடினால் இந்திரன் எழுதிய ஐந்திரம் என்னும் இலக்கணத்தை அறிந்தவர் ஆவீர்”.

'பவகாரணி என்னும் பொய்கையில் நீராடினால் இந்தப் பிறவிக்குக் காரணமாக இருக்கும் பழம் பிறப்பைப் பற்றி

  • *

அறிவீர்'.