பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 289

'இட்டசித்தியில் நீராடினால் நீங்கள் கருதும் பொருள் அனைத்தும் பெறுவீர். எனவே இப்பிலத்துள் சென்று ஏதோனும் ஒன்றில் முழுக வேண்டும் என்று கருதினால் திருமால் குன்றத்தில் அங்கு வீற்றிருக்கும் திருமாலை முதலில் வணங்குவீராக. அத் திருமாலைத் துதித்து விட்டு அம்மலையை மும்முறை வலம் வந்தால் அங்கே சிலம்பாற்றங் கரையில் மலர் பூத்தவேங்கை மரத்து நிழலில் ஒரு பெண் தெய்வம் வந்து தோன்றும். அத்தெய்வம் மூன்று வினாக்களைத் தொடுக்கும். இம்மைக்கு இன்பம் தருவது யாது? மறுமைக்கு இன்பம் தருவது யாது? இவ்விரண்டும் அல்லாமல் எப்பொழுதும் நிலைத்து நிற்கும் இன்பம் யாது? என்ற வினாக்களை எழுப்பும்; இவற்றிற்குத் தக்க விடை தந்தால் பிலத்துக்குள்ளே செல்லும் தகுதி உண்டு என்று அத்தெய்வம் உறுதி செய்யும். அவர்களுக்கு உள்ளே செல்ல வழி காட்டும்; அவள் அம் மலையில் நிலைத்து வாழ்பவள்; மலைச் செல்வி என்று

அவளைக் கூறுவர்.

அவள் தகுதி உடையவர்க்கே கதவினைத் திறந்து விடுவாள். அந்நெடிய வழியே சென்றால் பல கதவுகள் இடையிடும். இறுதியில் 'ஒட்டுக் கதவு' ஒன்று தோன்றும். அதாவது இரண்டு கதவுகள் ஒட்டிய கதவு அது ஆகும். அதன் உள்ளே சென்றால் சித்திரம் போன்ற சீர்மை உடைய அழகி ஒருத்தி தோன்றுவாள். 'அழிவு இல்லாத பேரின்பம் எது? என்பதற்கு விடை தந்தால் உதவுவேன்' என்று கூறுவாள். தக்கவிடை தராவிட்டாலும் அவர்களுக்கு எத்தகைய துன்பமும் விளைவிக்கமாட்டாள். நெடு வழிமட்டும் காட்டுவாள்; விடை தருவாரை அந்த மூன்று பொய்கைகளையும் காட்டி அங்கே அவர்களைக் கொண்டு விடுவாள். அவள் திரும்பிவிடுவாள். பஞ்சாட்சர மந்திரத்தையும், அஷ்டாட்சர மந்திரத்தையும் உச்சரித்துக் கொண்டு விரும்பிய பொய்கையில் முழுகினால் விரும்பிய பேறுகள் கிடைக்கும். கண் கூடாகக் கண்ட அனுபவம் இது, நம்பிச் செல்லலாம்' என்றான்.

'இவற்றின் பயனைக் கருதாமலும் செல்லலாம்; திருமாலை நினைத்து வழிபட்டால் அவன் கருடக் கொடியுடைய துண் தோன்றும். அதை வழிபட்டு இத்திருமால் திருஅருள்