பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளங்காடிப் பூத வழிபாடு இருபெரு வேந்தர் முனையிடம் போல இருபாற் பகுதியின் இடைநிலம் ஆகிய கடைகால் யாத்த மிடைமரச் சோலைக் கொடுப்போர் ஒதையும் கொள்வோர் ஒதையும். நடுக்குஇண்றி நிலைஇய நாள் அங் காடியில் சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென, வெற்றிவேல் மண்னற்கு உற்றதை ஒழிக்க' எனத் தேவர் கோமாண் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப் புழுக்கலும், நோலையும், விழுக்குஉடை மடையும், பூவும், புகையும், பொங்கலும் சொரிந்து, துணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து ஆடிப், 'பெருநில மண்னன் இருநிலம் அடங்கலும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும், வளனும், சுரக்க' என வாழ்த்தி மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும் மூதிற் பெண்டிர் ஒதையின் பெயர

வீரர்கள் பலியிடல்

மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும், பட்டின மருங்கின் படைகெழு மாக்களும், முந்தச் சென்று. முழுப் பலிபீடிகை, வெந்திறல் மண்னற்கு உற்றதை ஒழிக்க" எனப் பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆக எனக், கல்உமிழ் கவணினர், கழிப்பிணி கறைத்தோல், பல்வேல் பரப்பினர் மெய்உறத் திண்டி, ஆர்த்துக் களம்கொண்டோர் ஆர் அமர் அழுவத்துச். சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை, "வெற்றி வேந்தண் கொற்றம் கொள்க" என, நற்பலி பீடிகை நலம்கொள வைத்து, ஆங்கு, உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி,

60

70

75

85