பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 புறஞ்சேரி இறுத்த காதை

பயின்ற அழகி கண்ணகியும், அவள் கணவன் ஆகிய கோவலனும் அதனைத் தொழுது வணங்கினர்.

அதன் கரையைக் கடந்து நகருக்குச் செல்ல வேண்டுவது ஆயிற்று; அங்கு உயர்குடி மக்கள் உவகையுடன் உல்லாசப் பயணம் செய்யும் அம்பிகள் அடுக்கடுக்காக நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றின் வடிவுக்கேற்ப அவை கரிமுக அம்பி, பரிமுக அம்பி, அரிமுக அம்பி எனப் பேசப்பட்டன. அவற்றை நாடும் மனநிலையில் அவர்கள் இல்லை. அங்கு இருந்த மரப்புணையாகிய கட்டு மரம் அதனைத் தேர்ந்து அதில் அமர்ந்து அவ்வாற்றினைக் கடந்தனர். வைகையின் மலர்ப்பொழில் சூழ்ந்த தென் கரையை அடைந்தனர்.

தேவர்கள் விரும்பித் தங்கும் நகர் அது என்று மதித்து அதனை வலம் செல்வது நலம் தரும் எனக் காவற்காடுகள் சூழ்ந்த அகழியைச் சுற்றிச் சென்றனர். மதிற்புறத்தே நடந்தனர். அந்த அகழியில் குவளையும், ஆம்பலும், தாமரையும் இவர்கள் துயரத்தை அறிந்தன போல் கண்ணிர் வீட்டன. கள் ஆகிய தேனைச் சொரிந்தன; அது கண்ணிர் எனப்பட்டது. அதன் தாள்கள் நடுங்கின; வண்டுகள் இனைந்து வருந்துவன போல் பண் அமைவு கொண்டு ஒலி செய்து இரக்கம் காட்டின.

பகைவரை வெற்றி கொண்டதன் அறிகுறியாக எடுத்த மதில் கொடிகள் வராதே' என்று தடுப்பன போல் மறித்துக் கை காட்டின. பல்வகைச் சோலைகள் மிடைந்த மதிலின் வெளிப்புறப் பகுதியை அடைந்தனர். அங்குத் துறவிகள் மட்டும் தங்கும் உரிமை பெற்றிருந்தனர்.

அந்தப் புறஞ்சேரியில் அவர்கள் தங்கினர். சிறிது நேரமே அங்குத் தங்க அவர்கள் இயலும்; இருள் வரும் வரை அங்கே அவர்கள் தங்க நேர்ந்தது.

14. ஊரைச் சுற்றிவருதல் (ஊர் காண் காதை) பொழுது விடிந்தது. அவர்கள் தங்கி இருந்த சோலை

களிலும், அடுத்து இருந்த நீர்ப்பண்ணைகளிலும், கதிர்முற்றி வளைந்து இருந்த கழனிகளிலும் பறவைகள் துயில் நீங்கி