பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திர விழவு ஊர் எடுத்த காதை

29



திருமாவளவனின் வெற்றி

இருநில மருங்கிற் பொருநரைப் பெறா அச்
செருவெங் காதலின், திருமா வளவன் 90
வாளும். குடையும், மயிர்க்கண் முரசும்,
நாளொடு பெயர்த்து, 'நண்ணார்ப் பெறுக இம்
மண்ணக மருங்கின் என் வலிகெழு தோள் எனப்
புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள்
அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப் 95
பகைவிலக் கியது இப் பயன் கெழு மலை' என
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையின் பெயர்வோற்கு,

திருமாவளவன் மண்டபம்

மாநீர் வேலி வச்சிர நல்நாட்டுக்
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும். 100
மகதநல் நாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்,
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும்,
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும் 105
நுண்வினைக் கம்மியர் காணா மரபின
துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு
மயன்விதித்துக் கொடுத்த மரபின; இவைதாம்
ஒருங்குடன் புணர்த்து, ஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்
அரும்பெறல் மரபின் மண்டபம் அன்றியும் 110

ஐவகை மன்றங்கள்

வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்
கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்
உடையோர் காவலும், ஒரீஇய ஆகிக்
கட்போர் உளர் எனின், கடுப்பத் தலைஏற்றிக் 115
கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர்ப் பனிக்கும் வெள்இடை மன்றமும்