பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 309.

அடுத்து அவன் கண்டது அரசர்களும் விழைந்து செல்லும் கடை வீதி ஆகும். அங்கே கிடைக்காத பொருள்களே இருக்க முடியாது. மூடுவண்டிகள், வண்டிச்சக்கரங்கள், தேர்மொட்டு கள், மெய்புகுகவசம், மணிகள் பதித்த அங்குசம், தோலால் செய்யப்பட்ட அரணம், யோகத் தடி, வளைதடி, கவரி, பல் வகைப்படங்கள், குத்துக்கோல், செம்பு வெண்கலப் பாத்திரங்கள், புதுப் புதுச் சரங்கள், மாலைவகைகள், வாள் வகைகள், தந்தக் கடைச்சல்கள், புகைவகைகள், மயிர்ச் சாந்துகள், பூமாலைகள், மற்றும் பெயர் விவரித்துக் கூற முடியாத பல பொருள்கள் இங்கு விற்கப்பட்டன. அரசர்கள் தம் தேவைக்குத் தேடி வந்த அங்காடித் தெரு இது, அதனைக்

35 GRÖJL_{TGŪT.

ஒளிபடைத்த வயிரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், நீலம், கோமேதகம், வைடுரியம், முத்து, பவளம் ஆகிய நவமணிகள் தனியே விற்கப்பட்டன. அந்த நவமணிக் கடைவிதியைக் கண்டான்.

அடுத்து அவன் கண்டது பொன் நகைக் கடை வீதியாகும். சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என வகை செய்யப்பட்ட பொன் வகைகள் அங்குக் கிடைத்தன; கொடிகள் கட்டி இவற்றை அறிவுறுத்தினர்.

அடுத்தது அவன் கண்டது துணிவகைகள் விற்பனை செய்த வீதியாகும். பருத்தி நூலாலும், எலிமயிராலும், பட்டு நூலாலும் நுட்பமாக நெய்யப்பட்ட துணிவகைகள் பல நூறு எண்ணிக்கையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அடுத்து அவன் கண்டது கூலமாகப் பண்டங்களைக் குவித்துவைத்த நவதானியக் கடை வீதியாகும். இங்குக் குறிப்பிடத்தக்கவை அவர்கள் அளக்கும் கோல்களாகும். நிறுத்தும் கோல் நிறைக்கோல் எனப்பட்டது. பறை என்பது பருத்த உள் அறையை உடைய அளக்கும் கருவி என்று கூறலாம்; மற்றொன்று அம்பணம் எனப்பட்டது; அது மரக்கால் வகையாகும். இவற்றைக் கொண்டு தானியங்களை அளந்து கொட்டி விற்றனர். இவ் அளவு கோல்களைத் தாங்கிக் கொண்டு இவ்வணிகர்கள் அங்கும் இங்கும் திரிந்து இயங்கினர்; மிளகு மூட்டைகள் பல இங்குக் குவிக்கப்பட்டிருந்தன. கால வரையறை இன்றி இங்கு வாணிபம் நடைபெற்றது. -