பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 311

இடத்துக்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு அங்குக் கோவ லனையும். கண்ணகியையும் கண்டது வியப்பைத் தந்தது. அவர்கள் அப்பொழுதைய நிலையையும் அறிந்தவன் ஆயி னான். கோவலனை அவன் நன்கு உணர்ந்தவன். 'நன்மைக்கு இருப்பிடமாகத் திகழ்ந்தவன்; அவனுக்கு இக்கேடுகள் வந்தது ஏன்?' என்று வினாவைத் தனக்குள் எழுப்பிக் கொண்டான்.

கோவலன் சிறப்புகள்

கோவலன் கடந்த கால வாழ்வின் ஒளிச் சிகரங்கள் அவன் கண்முன் வந்து நின்றன. அவற்றைக் கவுந்தி அடிகள் அறிய அவன் அறிவித்தான்.

பழைய வாழ்க்கையை விவரிக்கத் தொடங்கினான்; மாதவி ஆடற் செல்வி. எத்தகையவள்? அரசனால் பாராட்டப் பெற்றவள்; பரிசுகள் பெற்றவள்: மாந்தளிர் மேனி மாதவி அவளுடன் அவன் வாழ்க்கை இன்பமாக நடத்தினான். கலையும் காதலும் அவனைக் கவ்வி இழுத்து வைத்தன; இன்ப விழைவில் திளைத்து மகிழ்ந்தான்.

காதலின் கனியாக மாதவி குழந்தைப் பேறு பெற்றாள். தீண்டாமை கழிந்ததும் அக்குழந்தைக்குப் பெயர் இடுதலை ஒரு சடங்காகத் கொண்டனர். ஆயிரம் கணிகையர் கூடினர். அக்குழந்தைக்குப் பெயர் இடுவது பற்றிப் பேச்சு எழுந்தது. அப்பொழுது கோவலன் ஒரு பழைய நிகழ்ச்சியை எடுத்துக் கூறினான். அவன் முன்னோர்களுள் ஒருவன் கடல் அலையில் அகப்பட்டுக் கரைசேர முடியாமல் தவித்தான். தெய்வம் ஒன்று அவன் செய்த புண்ணியத்தால் அவனுக்கு உதவியது. மந்திரம் சொல்லி அவனைக் கரை சேர்ப்பித்தது. அத்தெய்வத்தைப் போற்றி மதிக்கும் வகையில் மணிமேகலா தெய்வம் அதன் பெயரை இடுக என்று அவன் கூறினான். 'மணிமேகலை’ என்ற பெயர் அக்குழந்தைக்கு இடப்பட்டது. மணிமேகலா தெய்வம் அவன் மதித்த குலதெய்வமாக அமைந்தது; அந்நிகழ்ச்சியை மாடலன் விவரித்தான்.

பெயரிடுதலைத் தொடர்ந்து தானம் செய்ய முற்பட்ட போது நரைமுதுயாக்கை உடைய மறையவன் ஒருவன் தண்டு கால் ஊன்றி நடந்து வந்தான். பாகனைத் துக்கி எறிந்து விட்டு