பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 அடைக்கலக் காதை

வேகமாக வந்த யானை ஒன்று இந்த முதியவனைத் துதிக்கையில் கொண்டு துயரத்தில் ஆழ்த்தியது.

உயிருக்குப் போராடிய உயர்ந்தோனைக் காப்பாற்றத் தன் உயிரைப் பொருட்படுத்தாது கோவலன் அதன் கையகத்தில் பாய்ந்து அவனை மீட்டான். அவ் யானையின் பிடரியில் இருந்து விஞ்சையன் என விளங்கினான். அவனைக் 'கருணை மறவன்' என்று அருகில் இருந்தவர்கள் பாராட்டினர்.

மற்றொரு நிகழ்ச்சி. படுத்துக் கிடந்த குழந்தையை அடுத்துக் கடிக்கவந்த பாம்பினைக் கொன்று வீழ்த்திய கீரிப்பிள்ளை அதன் வாயில் செங்குருதி கண்டு அது தன் பிள்ளையைக் கடித்து விட்டது என்று தவறாகக் கருதி அதனை அடித்தாள் ஒருத்தி, அது துடித்துச் செத்தது.

பாவச் செயல் செய்த அவளைக் கணவன் மன்னிக்காமல் அது தீரும் வரை அவளைச் சேர்வது இல்லை என்று ஊரைவிட்டு நீங்கினான். பாவம்தீரப் பவித்திரம் செய்ய அவனுக்குப் பொருள் தேவைப்பட்டது. வடமொழியில் எழுதிய வாசகம் ஒன்று: 'கருமம் தொலைத்துப் பலன் அடைவீர்” என்று எழுதித் தந்தான்.

ஏட்டை நீட்டினாள்; காசு கொடுத்து மாசு நீக்க யாரும் முன் வரவில்லை. கேட்டனன் கோவலன்; பொருள் கொடுத்து உதவினான்; பிரிந்தவன் வந்து ஒன்று சேர்ந்தான். சிதைந்த வாழ்க்கை சீர்பெறச் செய்த செம்மலாக விளங்கினான். 'செல்லாச் செல்வன்' என்று அவனை அனைவரும் அழைத்துச் சிறப்புச் செய்தனர்.

மற்றும் ஒரு நிகழ்ச்சி பத்தினி ஒருத்திமேல் பழிச்சொல் கூறி அவள் வாழ்க்கையைக் கெடுத்தான் ஒரு கயவன். அறம் அவனை ஒறுத்தது. பூதம் பாசம் கொண்டு அவனைக் கட்டி இழுத்துச் சென்றது.

நாசம் வந்து அவனை அணுகியபோது பாசத்தால் பிணிப்புண்ட அவன் தாய் அப்பூதத்திடம் முறையிட்டாள். "என் உயிர் கொண்டு அவன் உயிர் தருக" என்று வேண்டினாள். "இழிமகன் ஒருவன் உயிர்க்கு ஈடாக நல் உயிரைக் கொள்ளும் நயப்பாடு இங்கு இல்லை' என்று கூறி