பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை உயர் குலத்து மகளிரைப் போல் அவளுக்குப் பொன் நகைகள் பூட்டிப் பொலிவு பெறச் செய்தாள். அதன்பின் அவளுக்குத் தன் மகள் ஐயையை அறிமுகம் செய்தாள். 'இவள் இட்ட வேலையைச் செய்து தருவாள்; அடித்தொழில் ஆட்டியாக உன்னுடன் இருப்பாள்' என்று கூறினாள்.

'மற்றும் உன்னைப் பொன்னைப் போலப் பாது காப்பேன்; கவுந்தி அடிகள் பாதுகாப்பான இடத்தில் உன்னைச் சேர்த்து இருக்கிறார். இனி உன் கணவனுக்கு எந்தக் குறையும் இருக்காது' என்று சாற்றினாள்.

அடுத்து மாதரி ஆய்ச்சியரை நோக்கி அறிவுறுத்தினாள்; 'இவள் கணவன் சாவக நோன்பி ஆதலின் புதிய பாத்திரங்கள் தருக; ஐயை உடன் இருந்து உதவுவாள்' என்று கூறினாள்; அவர்களும் தக்க பாத்திரங்களை மிக்க அளவில் தந்து சேர்த்தனர். மற்றும் பலாக்காய், வெள்ளரிக் காய் மாதுளங்காய், மாவின்கனி, வாழைக்காய், நெல் அரிசி, பால், தயிர், நெய் முதலியன கொண்டுவந்து தந்தனர். அவற்றைக் கொண்டு அவள் சமைக்கத் தொடங்கினாள்.

கண்ணகி உணவு படைத்தல்

மெய்விரல் சிவக்கப் பல்வேறு பசுங்காய்களை அரிவாளில் வைத்துக் கொய்தாள்; அவள் திருமுகம் வியர்த்தது; கண்கள் சிவந்தன; ஐயை அடுப்புப்பற்ற வைக்க உதவினாள். தன் கைத்திறன் அமையக் கணவனுக் காகச் சமைத்து முடித்தாள்.

பனை ஒலை கொண்டு அழகாகப் பின்னப் பட்ட தடுக்கை அதனை இட்டாள்; அதில் செல்வமகனாகிய கோவலன் அமர்ந்தான். அவன் கால் அடிகளைக் கழுவித் துடைத்தாள்; தரையில் நீர் தெளித்தாள்; குமரிவாழையை விரித்து உணவு பரிமாறினாள். 'அமுதம் உண்க அடிகளே' என்று அன்புடன் கூறினாள். அவனும் தன்குல மரபுக்கு என விதிக்கப்பட்ட சடங்குகளின்படி கைகால் கழுவிக்கொண்டு உண்ண அமர்ந்தான்.

அவள் உணவு இட அவன் உண்ணும் காட்சி ஆயர் மகளிரை மகிழச் செய்தது. அவர்களுக்குக் கண்ணன் நப்பின்னை காட்சி நினைவில் நின்றது. "ஆயர் பாடியில் யசோதை பெற்றெடுத்த காயாம் பூ நிறத்தவனாகிய கண்ணன்