பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சிலப்பதிகாரம்

கூனும், குறளும், ஊமும், செவிடும், அழுகுமெய்யாளரும் முழுகினர் ஆடிப், பழுதுஇல் காட்சி நல்நிறம் பெற்று. | 20 வலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும் வஞ்சம் உண்டு மயல் பகை உற்றோர், நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர், அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர். சுழல்கண் கூளி கடுநவைப் பட்டோர். 125 சுழல வந்து, தொழத் துயர் நீங்கும் நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும் 'தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர் அவம்மறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர், அறைபோகு அமைச்சர், பிறர்மனை நயப்போர். 130 பொய்க்கரியாளர், புறங்கூற்றாளர், எண் கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர்' எனக் காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப் பூதம் புடைத்து உணும்பூத சதுக்கமும் அரைசுகோல் கோடினும், அறங்கூறு அவையத்து, 135 உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும், நாவொடு நவிலாது, நவைநீர் உகுத்துப் பாவை நின்று அழுஉம் பாவை மன்றமும் மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும் ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ 140 நெடுங்கொடி எடுத்தல் வச்சிரக் கோட்டத்து மணம்கெழு.முரசம் கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி, வால்வெண் களிற்று அரசு வயங்கிய கோட்டத்துக் கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித் தயங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து. I45 மங்கல நெடுங்கொடி வாண்உற எடுத்து