பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 கொலைக் களக் காதை

"பொன்னே! கொடியே! புனை பூங்கோதாய்! நாணின் பாவாய்! நீள்நில விளக்கே! கற்பின் கொழுந்தே பொற்பின்செல்வி' என்று கூறிப் பாராட்டினான். அவளை நன்கு உணர்ந்த நிலைமையில் பெண்மைக்குரிய நல்லியல்புகளை அறிந்த வனாய் அவளை உருக்கமாக விளித்தான்; அவள் காலடிகளைக் காண்கின்றான். சீறடிகளை அழகுபடுத்திய சிலம்பு அதைக் கேட்டுப் பெற்றான். 'சீறடிச்சிலம்பில் ஒன்று கொண்டு செல்கிறேன்; அதை விற்று முதல் பொருள் ஆக்குவேன். அதனை மாற்றி வருகிறேன்; கலங்காது இருப்பாயாக' என்று கூறினான். அதனைப் பெற்றுக் கொண்டு காதலியாகிய அவளை உளமாரத் தழுவிக் கொண்டு விடைபெற்றான். பக்கத்தில் தக்க உறவினர் இல்லாமல் விட்டுச் செல்வதை நினைத்துப் பார்க்கிறான் அவன். அவள் தனி மகள் மனம் வெதும்பினான்; கண்களில் நீர் வெளிப்பட அதை மறைத்துக் கொண்டு அவளை விட்டு நீங்கினான்.

கொல்லனைச் சந்தித்தல்

பசுக்கள் நின்ற அந்த ஆயர்கள் வீட்டை விட்டு விலகினான். தளர்ந்த நடையோடு பெருந்தெருவை அடைந் தான். முசுப்பினை உடைய எருது எதிரே வந்தது. ஆயர்களாக இருந்தால் அது தீயநிமித்தம் என்று நின்று இருப்பார். இவன் அதை அறியாதவன். அதனால் அவன் அதைப் பொருட் படுத்தவில்லை. அது இழுக்கு என்பதை அவன் அறிந்திலன். அவனுக்கு அதை அறிய வாய்ப்பும் இல்லை; இடையர் மன்றங்களைக் கடந்து மாநகரில் நடந்து சென்று பீடிகைத் தெருவாகிய கடைவிதியை வந்து அடைந்தான்.

நூற்றுவர் பின்வரக் கள்ளச் சிந்தையன்; சட்டை யிட்டவன்; விலகி ஒதுங்கி நடந்து வந்தான்; ஒரு பொற் கொல்லன்; அவன் தோற்றம் அவனைத் தனிப்படுத்திக் காட்டியது. கையில் கோல் ஒன்று அவன் வைத்திருந்தான். அதனால் அவனுக்குத் தலைமை இருந்தது என்பதை அறிய முடிந்தது. பாண்டியன் மதித்த கொல்லன் இவன் என அனுமானித்தான். அதனால் அவனை அணுகி 'அரசிக்கு ஏற்றது ஒர் அணி அதற்கு நீ விலை இட்டுக் கூறமுடியுமா?' என்று கேட்டான்.