பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 கொலைக் களக் காதை

அவனை என் சிறுகுடிலகத்து நிறுத்தி வைத்துள்ளேன்' என்று கூறினான். 'அவன் கன்னக்கோல் இன்றியும், கவைக்கோல் இன்றியும் துன்னிய மந்திரம் துணையாகக் கொண்டு மன்னிய காவலரை ஏய்த்துக் கவர்ந்தான்' என்று விளக்கினான்.

அரசன் ஆணை

அரசன் சிந்தித்துப் பார்க்கவில்லை. எல்லாம் விதிதான்; அவன் அறிவு மயங்கிவிட்டது. உடனே காவலர்களை அழைத்தான். தன் மனைவியின் சிலம்பு கள்வன் கையில் இருந்தால் அவனைக் கொன்று அச்சிலம்பினைக் கொண்டு வருக என்று கட்டளை இட்டான். ஆராயாது அவன் கட்டளை இட்டது ஏன்? சிலம்பு காட்டினால் அரசி சிந்தை மாறுவாள் என்று நினைத்தான். அது மட்டு மன்று; உடன் அமைச்சர்கள் இல்லை அறிவுரைகூற, தீர்ப்புக்கூற வேண்டிய இடம் அது அன்று; எல்லாம் கொல்லனுக்குச் சாதகமாக முடிந்தன.

காவல் ஆணை அதனைச் செயல் படுத்தக் கொலை யாட்களைக் கொல்லன் உடன் அழைத்துச் சென்றான். வினை அங்கு வலைவிரித்துக் காத்து இருந்தது. அதில் அவன் அகப்பட்டு இருந்தான். அவன் மதி அப்பொழுது செயல்படவில்லை. சிலம்பு காண வந்தவர்கள் இவர்கள் என்று கொல்லன் கோவலனுக்கு அவர்களைக் காட்டினான்; கோவலன் அதை நம்பிவிட்டான்.

வாதங்கன்

அந்தக் கொலையாளிகள் உடனே செயல்படவில்லை. அவன் சலனமற்ற தோற்றத்தைக் கண்டு “இவன் கொலைப் படும் மகன் அல்லன்' என்று அவர்களுள் ஒருசிலர் மறுப்புத் தெரிவித்தனர். அவர்கள் உண்மை ஒளி காண்பதற்குமுன் கொல்லன் அவர்களைத் தனியே அழைத்துப் பேசினான்; அவர்கள் கூற்றை எள்ளி நகையாடினான். "கள்வர் என்பவர் கடுமையான தோற்றம் கொண்டிருக்கத் தேவையில்லை; அவர்கள் மற்றவர்களை எளிதில் மயக்கும் ஆற்றல் உடை யவர்கள்; அந்த மயக்கத்தில் இவர்கள் ஆட்படுதல் கூடும்” என்று விளக்கினான்.

'களவாடுபவர்கள் மந்திரம் கற்றவர்கள்; தெய்வத்தை வேண்டி ஆற்றல் பெற்றவர்கள்: மருந்திட்டு மற்றவர்களை