பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 323

மயக்குபவர்கள்; நிமித்தம் அறிந்து செயல்படுவார்கள்; தந்திரமாகச் செயல்படுவர்; இடம், காலம், கருவி ஆராய்ந்து சிந்திப்பவர்கள்; அதனால் அவர்களை அடையாளம் காண்பது அரிது ஆகும்' என்றான்.

'மருந்திட்டு அதனால் மயங்குவீர் என்றால் மன்னவன் ஆணைக்கு நீர் ஆட்படுவீர்; உங்கள் தலைகள் உருள்வது உறுதி; அவர்கள் மந்திரத்தைச் சொன்னால் தேவகுமாரர்கள் போல் மறைந்துவிடுவர். தெய்வத்தை நினைப்பவர் ஆயின் தம் கையகத்து உள்ள பொருளை அவர்களால் மறைக்க இயலும்; அவர்கள் மந்திரம் போட்டால் நாம் மறைந்து இருந்த இடத்தை விட்டுப் பெயரவே இயலாது. நிமித்தம் பார்த்தே திருடுவதை அவர்கள் நியமித்துச் செயல் படுவர். களவு நூல் காட்டும் சூழ்ச்சிகளை மேற்கொண்டால் இந்திரன் ஆரமும் அவர்கள் கைக்குச் சென்று போய்ச் சேரும். இடம், காலம் கருதி அவர்கள் செயல்பட்டால் யாரும் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. அவர்களுக்குப் பகல் இரவு என்ற நேரப்பாகுபாடு இல்லை'.

'நினைத்ததைச் சாதிப்பதில் அவர்கள் நிலைபேறு உடையவர்கள் ஆவர். அவர்கள் புகாத இடமே இல்லை. காற்று நுழையாத இடமாயினும் அவர்கள் புகுந்து ஆற்றுவர். துாதர் கோலத்தில் வாயிலின் நுழைந்தான் ஒருவன், மாதர் கோலத்தில் அவன் உள்ளே சென்றான். விளக்கு ஒளியில் இருட்டு நேரத்தில் இளவரசனின் கழுத்துச் சங்கிலி வயிரம் பதித்தது; மின்னலைப்போல் பறித்தான்; மறைந்தான்'.

"வாள் கொண்டு இளவரசன் வீசினான். ஆள் அவனுக்கு அகப்படவில்லை. தோள் கொண்டு அவனைப் பற்ற முயன்றான். தூண் ஒன்றைக் காட்டிவிட்டுச் சேண்துரம் சென்றான். களவு நூல் கற்று உளவு அறிந்து திருடிய அவனை இதுவரை யாரும் கண்டு பிடிக்கவே இல்லை. அவன் இடத்தை யாராவது காட்ட முடியுமா என்று பழைய நிகழ்ச்சி ஒன்றைக் கூறி அவர்கள் பிழைகளை எடுத்துக் காட்டினான். அவன் கூறியதை ஒட்டி மற்றொருவன் தன் சொந்த அனுபவத்தைக் கூறி உயிரோட்டம் தந்தான். 'அவன் வயது குறைந்த இளைஞன், வேல் தாங்கி இருந்தான். நிலம் தோண்டும் உளி வைத்திருந்தான். நீலநிற உடை உடுத்தி இருந்தான். நகைகளைக்