பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 327

வந்தால் அவன் வாயில் கொன்றையம் குழலிசையைக் கேட்போம்; தோழி' என்ற கருத்துப்படப் பாடினர்.

இவ்வாறே ஏனைய பாடல்களும் அமைந்தன; 'பாம்பைக் கயிறாகக் கொண்டு கடலைக் கடந்தவன் அவன் ஆம்பலங்குழல் இசைப்பான்' என்றனர்.

'தொழுநைத் துறையில் குருந்து ஒசித்த மாயவன் முல்லைப் பண் பாடுவான்' என்று பாடினர்.

'ஆடையை ஒளித்தான்; அவன் வண்ண அழகைப் பாடுவோம்; அந்நிலையில் நாணிக் குனிந்த நங்கையின் நளினத்தைப் பாடுவோம்'.

'யமுனை ஆற்றில் கண்ணனின் நெஞ்சம் கவர்ந்த நப்பின்னையைப் பாடுவோம். அன்று நப்பின்ைனையின் இதயம் கவர்ந்த இறைவனாகிய கண்ணனைப் பாடுவோம். இருவரையும் பாடுவோம் நாம்'

'ஆடையிழந்தாள் வளையல்களை நெகிழ்த்தாள்; தன் கைக்கொண்டு தன் மேனியை மறைத்தாள். அந்தப் பேரழகி யைப் பாடுவோம் நாம். அவள் முக அழகைக் கண்டு அகம் நெகிழ்ந்தவன் கண்ணன்; அவன் காதலைப் பாடுவோம் நாம்'.

கண்ணனுக்கு இடப்பக்கத்தும் பலராமனுக்கு வலப் பக்கத்தும் நப்பின்னை நின்றாள்.

மற்றும் இடம் மாறிநின்றாள் மற்றொரு முறை; இவ் விருநிலைகளில் நாரதனைப் போல நாதம் எழுப்பி யாழ் இசை இயற்றினர் மற்றவர்கள்.

கண்ணன் பலராமனுடனும் நப்பின்னையுடனும் ஆடிய ஆட்டத்தில் ஆயர் சிறுமியரும் பங்குகொண்டனர் தாளத்துக் கேற்ப அடிபெயர்த்து இவர்கள் ஆடிய குரவைக் கூத்தை யசோதை கண்டு மகிழ்ந்தாள். அதனைச் செப்பிப் பாடினர். உள்வரிப்பாடலாகத் திருமாலைப் போற்றிப் பாடினர்.

தெய்வப் பாட்டினுள் அரசர் வெற்றிகளை உள் வைத்துப் பாடியதால் இவை உள்வரிப் பாடல் எனப்பட்டன; பாண்டியன்